போதையில் இருந்து கணவனை மீட்க மறுவாழ்வு மையத்தில் சேர்த்த மனைவி.. கொலை செய்த கணவன்..!

0
263

போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்த மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, அம்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் வேலாயுதம் (55). இவருக்கு ரேவதி என்ற மனைவி உள்ளார். இருவருக்கும் ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். வேலாயுதத்திற்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. தினமும் மது அருந்தி வருவதால் அவரது மனைவி அந்த பகுதியில் இருந்த போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.

சிகிச்சை முடிந்த பிறகு கடந்த 2 நாட்களுக்கு முன் அவர் வீடு திரும்பியுள்ளார்.சிகிச்சைக்கு அனுப்பியதால் அவர் மனைவி மீது ஆத்திரத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பவதன்று மது அருந்திவிட்டு வந்த அவர் மனைவியுடன் தகராறில் ஈடுப்பட்டார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த வேலாயுதம் மனைவியை தாக்க ஆரம்பித்துள்ளார்.

அப்போது, அங்கிருந்த சுவற்றில் மோதிய ரேவதி இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் வேலாயுதத்தை கைது செய்தனர்.

மதுபழக்கத்தில் இருந்து வெளியே வர மறுவாழ்வு மையத்தில் சேர்த்த மனைவியிய கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Previous article5 வருடம் முதலீடு செய்தால் போதும் ரூ.14 லட்சம் வரை வருமானம் பெறலாம்…மூத்த குடிமக்களுக்கான சூப்பர் திட்டம் !
Next articleதினைப் பொருள் ஊக்குவிப்பு!! கூட்டத்தொடரில் எம்பிகளுக்கு மோடி கட்டளை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here