கால் ஆணி ஏற்பட்டு இருகிறதா? ஒரே நாளில் இதை குணமாக்க உதவும் மூலிகை மருத்துவம்!!

Photo of author

By Divya

கால் ஆணி ஏற்பட்டு இருகிறதா? ஒரே நாளில் இதை குணமாக்க உதவும் மூலிகை மருத்துவம்!!

காலில் ஆணி இருந்தால் அதை ஒரு தினங்களில் குணப்படுத்திக் கொள்ளும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது.

தீர்வு 01:-

1)மருதாணி இலை
2)மஞ்சள் தூள்

சிறிது மருதாணி இலை எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும்.பிறகு அதில் 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து விடவும்.

இதை கால் ஆணி மீது பூசி வந்தால் அவை சில தினங்களில் மறைந்து விடும்.

தீர்வு 02:-

1)அம்மான் பச்சரிசி

கால் ஆணியை குணமாக்க அம்மான் பச்சரிசி இலையின் பாலை அதன் மீது தடவினால் அவை சில தினங்களில் குணமாகும்.

தீர்வு 03:-

1)கொடிவேலி பட்டை

இவை நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.50 கிராம் அளவிற்கு வாங்கிக் கொள்ளவும்.இந்த பட்டையை அரைத்து பேஸ்டாக்கி கால் ஆணி மீது பூசி வந்தால் அவை ஓரிரு தினங்களில்குணமாகி விடும்.

தீர்வு 04:-

1)வசம்பு

ஒரு துண்டு வசம்பை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி நீரில் குழைத்துக் கொள்ளவும்.இதை கால் ஆணி மீது பூசினால் அவை சில தினங்களில் குணமாகி விடும்.

தீர்வு 05:-

1)பூண்டு
2)மஞ்சள் தூள்

இரண்டு பல் பூண்டை தோல் நீக்கி உரலில் போட்டு இடித்துக் கொள்ளவும்.பிறகு அதில் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கால் ஆணி மீது பூசினால் அவை சில தினங்களில் மறைந்து விடும்.

தீர்வு 06:-

1)குப்பைமேனி இலை
2)மஞ்சள் தூள்

கால் கைப்பிடி அளவு குப்பைமேனி இலையை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பேஸ்டாக்கி மஞ்சள் தூள் கலந்து கால் ஆணி மீது பூசி வந்தால் உரிய தீர்வு கிடைக்கும்.