சிறுநீரகத் தொற்று, அரிப்பு, புண் இவற்றிற்கு உடனடி தீர்வு!!கவலை வேண்டாம் இரண்டு நிமிடம் போதும்!!

Photo of author

By Parthipan K

சிறுநீரகத் தொற்று, அரிப்பு, புண் இவற்றிற்கு உடனடி தீர்வு!!கவலை வேண்டாம் இரண்டு நிமிடம் போதும்!!

இந்த பிரச்சனையானது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்கும் ஏற்படக்கூடிய ஒன்றாகும்.இது குழந்தைகள் முக்கியமாக சிறுநீரை அடக்குவதால் ஏற்படக்கூடிய ஒன்று.

தினமும் இதேபோன்று சிறுநீரை அடக்குவதால் அந்த இடத்தில் இன்பெக்சன் ஏற்பட்டு சிறுநீரகத் தொற்று ஏற்படும். அதுமட்டுமல்லாமல் அசுத்தமான ஆடைகள் மற்றும் அசுத்தமான கழிப்பறைகளை பயன்படுத்துவதாலும் சிறுநீரக தொற்று ஏற்படும்.

அதிலும் ஆண்களை விட பெண்கள்தான் அதிக அளவில் இந்தத் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். சிறுநீரகத் தொற்றானது சிறுநீரகப் பையை சுற்றி புண் அரிப்பு போன்றவற்றை ஏற்படுத்தும்.

இதனை நீங்கள் மிகவும் எளிமையாக சரி செய்யலாம். அதற்கு முதலில் திரிபலா பொடி எடுக்கவும் இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இந்த பொடி ஒரு ஸ்பூன் எடுத்து தண்ணீரில் கலக்கவும். கலந்த பின்பு உங்களுக்கு அரிப்பு ஏற்படுகின்ற பகுதியில் இந்த தண்ணீரை விட்டு கழுவினால் இரண்டு அல்லது மூன்று நாட்களில் சரியாகிவிடும்.

அரிப்பு மற்றும் புண் போன்றவற்றிற்கு கெமிக்கல் கிரீம்களுக்கு பதிலாக இதை பயன்படுத்தினால் எந்த வித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.

பின்னர் இப்பொழுது சிறுநீரகப்பை மற்றும் சிறுநீரகப் பாதை இவற்றில் உள்ள கிருமிகளை எப்படி அழிப்பது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

தாமரைப் பூ பொடி

சிறுகண்பீளை பொடி

செய்முறை

1: முதலில் ஒரு ஸ்பூன் தாமரைப் பூ பொடி மற்றும் ஒரு ஸ்பூன் சிறுகண்பீளை பொடி இவற்றை இரண்டையும் எடுத்துக் கொள்ளவும்.

2: பின்பு ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்துக்கொண்டு இந்த இரண்டையும் அதிலே சேர்த்து கலக்கவும்.

3: பின்னர் இவற்றை நன்கு கொதிக்க விட வேண்டும். கொதித்த பின்னர் சிறிது நேரம் கழித்து வடிகட்ட வேண்டும்.

4: வடிகட்டிய இந்த நீரை காலையில் சாப்பிடுவதற்கு முன்பு குடிக்க வேண்டும்.

5: இவ்வாறு பதினைந்து நாட்கள் தொடர்ச்சியாக இதனை குடித்துக் கொண்டே வந்தால் சிறுநீரகப்பை மற்றும் சிறுநீரகப் பாதையில் உள்ள அனைத்து கிருமிகளும் இறந்துவிடும்.

இதனால் சிறுநீரகப்பை சுத்தம் அடைந்து சிறுநீரக தொற்றிலிருந்து சுலபமாக விடுபடலாம்.