ஆக்சிஜன் மாஸ்க்கிற்கு பதிலாக “டீ கப் ஆ?? அரசு மருத்துவமனையின் அலட்சிய செயலால் பரபரப்பு!!

Photo of author

By CineDesk

ஆக்சிஜன் மாஸ்க்கிற்கு பதிலாக “டீ கப் ஆ?? அரசு மருத்துவமனையின் அலட்சிய செயலால் பரபரப்பு!!

CineDesk

Instead of an oxygen mask, “Tea cup huh?? The government hospital's careless action caused a stir!!

ஆக்சிஜன் மாஸ்க்கிற்கு பதிலாக “டீ கப் ஆ?? அரசு மருத்துவமனையின் அலட்சிய செயலால் பரபரப்பு!!

ஏழை மக்களுக்கு உடல்நலம் பாதித்தால் அவர்கள் செல்லக்கூடிய ஒரே இடம் அரசு மருத்துவமனை தான். இங்கு அனைத்து சிகிச்சைகளும் மக்களுக்காக இலவசமாக செய்து தரப்படுகிறது.

எனவே, மக்கள் அவசரத்திற்கு செல்கின்ற ஒன்றுதான் அரசு மருத்துவமனை தான். தினமும் இங்கு லட்சக்கணக்கான மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மக்களின் உயிரை பெருமிதமாக மதித்து வேலை செய்யக்கூடிய மருத்துவர்களும், செவிலியர்களும் மிகுந்து இருக்கிறர்கள் என்றலும், ஒரு சிலர் உயிரின் மதிப்பு தெரியாமல் அலட்சியமாக இருக்கின்றனர்.

அந்த வகையில், தற்போது காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. காஞ்சிபுரத்தில் உள்ள உத்தரமேரூரில் பள்ளி மாணவன் ஒருவனுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு அருகே உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாணவனுக்கு நெஞ்சில் இருக்கக்கூடிய சளியை இழக்கும் நெபுலைசர் என்ற சிகிச்சையை அளிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த சிகிச்சை முறைக்கு ஆக்சிஜன் மாஸ்க் ஆனது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

ஆனால் அந்த அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் மாஸ்க் இல்லை. எனவே, ஆக்சிஜன் மாஸ்க்கிற்கு பதிலாக டீ குடிக்க பயன்படுத்தும் டீ கப்பை ஆக்சிஜன் மாஸ்க் ஆக மருத்துவர்கள் பயன்படுத்தி உள்ளனர்.

இது குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் மிகவும் பரவ ஆரம்பித்துவிட்டது. இந்த சம்பவம் பற்றி கேள்வி பட்ட மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணையை மேற்கொண்டார்.

எனவே, இது சம்மந்தப்பட்ட விசாரணை அறிக்கை ஒன்றை இவர் மேல் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளார் என்று தகவல் கிடைத்துள்ளது. மருத்துவர்களின் இந்த அலட்சிய செயலை அனைவரும் எதிர்த்து வருகின்றனர்.

இதேபோல, சில நாட்களுக்கு முன்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் சிகிச்சைக்காக ஒன்றரை வயதுடைய குழந்தை ஒன்று அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது.

பிறகு அக்குழந்தையின் கை அழுகி, இறுதியாக அந்த பச்சிளம் குழந்தையின் கைகளை நீக்கும் நிலைமை ஏற்பட்டு விட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.