தீவிரமடையும் கனமழை !! வீட்டிலேயே இருக்க பொதுமக்களுக்கு மாநில முதல்வர் விடுத்த கடும் எச்சரிக்கை!!
கனமழை மிகவும் தீவிரமடைந்து வருவதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு வீட்டிலேயே இருக்குமாறு மக்களுக்கு முதல் மந்திரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வட இந்தியாவில் தற்போது பருவ மழை காலம் தொடங்கியுள்ளதால் பல்வேறு நகரங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. டெல்லி, குஜராத், அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், இமாச்சலபிரதேசம், ஜம்மு-காஷ்மீர், உத்தரகாண்ட் உள்பட மாநிலங்களில் தற்போது கனமழை மிகவும் தீவிரமடைந்துள்ளது. கனமழையின் காரணமாக பல்வேறு ஆறுகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் மலைப்பகுதிகளிலும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கனமழை காரணமாக வட இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ரயில் சேவை, போக்குவரத்து சேவை முற்றிலும் பாதிப்படைந்துள்ளது.
இந்த சூழ்நிலையில் வடகிழக்கு மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை கொட்டி வருவதால் மலைப்பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கனமழை தொடர்ந்து நீடித்து வருவதால் அடுத்த 24 மணி நேரத்தில் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம். வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு இமாச்சலப் பிரதேச முதல் மந்திரி சுவிந்தர் சிங் சுகா அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் அடுத்து 24 மணி நேரத்திற்கு மழை மேலும் தீவிரமடையலாம் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதால் பொதுமக்கள் காரணமின்றி யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். ஏற்கனவே கனமழை காரணமாக இமாச்சலபிரதேச மாநிலத்தில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.