குழந்தைகளுக்கு வழங்கப்படும் தடுப்பூசி தவணையை அறிய புதிய திட்டம் அறிமுகம்! பொது சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்!
குழந்தைகளுக்கு தற்போது தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ் மொத்தம் 11 வகையான தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றது.அந்த தடுப்பூசியின் மூலமாக காசநோய்,கல்லீரல் தொற்று,புற்றுநோய் கக்குவான் இருமல்,இளம் பிள்ளை வாதம்,ரண ஜன்னி,கல்லீரல் தொற்று,நிமோனியா,தொண்டை அடைப்பான்,வயிற்றுப்போக்கு,தட்டம்மை, ரூபெல்லா நோய்,ஜப்பானிய மூளைக்காய்ச்சல்,விட்டமின் ஏ போன்ற குறைபாடுகளுக்கு ஏற்படாதவாறு தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றது.
மேலும் இந்த திட்டத்தின் மூலம் ஆண்டு ஒன்றுக்கு 9.4 லட்சம் குழந்தைகள் தடுப்பூசிகள் போடப்படுகிறது.இந்த தடுப்பூசியானது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள்,வட்டார மருத்துவமனைகள்,மாவட்ட தலைமை மருத்துவமனைகள்,ஆரம்ப சுகாதார நிலையங்கள் போன்ற 11,000 இடங்களில் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் அளிக்கபடுகிறது.
இவ்வாறு குழந்தைகளுக்கு தடுப்பூசி தவணைகென தனியாக குறிப்பேடு புத்தகம் அல்லது அட்டைகள் வழங்கப்பட்டு அதில் எழுதிக் கொடுக்கும் முறையே உள்ளது.இந்நிலையில் நேற்று டெல்லியில் மத்திய அரசின் யூவின் செயலியின் தொடக்கம் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.
அந்த நிகழ்ச்சியில் தமிழக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டனர்.அதில் தமிழகத்தில் முதல் முறையாக இரு மாவட்டங்களில் அந்த செயலியின் மூலம் வழக்கமான தடுப்பூசிகளுக்கு டிஜிட்டல் சான்றிதழ் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் டிஜிட்டல் தடுப்பூசி சான்றிதழ்கள் வழங்கும் முறை விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்.இதன் மூலம் எந்த இடத்தில் இருந்தாலும் தடுப்பூசி தவணை தேதியை அறிந்து கொள்ள முடியும்.மேலும் யூவின் செயலியில் அதனை எப்போது வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் என தெரிவித்துள்ளனர்.