ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க புதிய வழிமுறை அறிமுகம்! அமைச்சர் வெளியிட்ட தகவல்!
திண்டுக்கல்லில் நடந்த கூட்டுறவு வாரவிழாவில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டார்.கூட்டுறவு சங்கங்களுக்கு தி.மு.க ஆட்சியின் போது தான் அவர்களுக்கென சொந்த கட்டிடம் கட்டித்தரப்பட்டது.இந்நிலையில் 6 ஆயிரத்து 500 பேருக்கு கூட்டுறவுத்துறையில் வேலை உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தியாவிலேயே இரண்டவாது இடமாக கொடைக்கானலில் கூட்டுறவு பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படவுள்ளது.அதுமட்டுமின்றி தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் சொந்த கட்டிடம் கட்டித்தரப்படும்.
மேலும் ரேஷன் கார்டு புதிதாக வாங்க விரும்புபவர்களுக்கு விண்ணப்பித்த 15 நாட்களில் ரேஷன் கார்டு வழங்கப்படும் என முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்திருந்தார். அந்த வகையில் மாநிலம் முழுவதும் 13 லட்சத்து 50 ஆயிரம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது. புதிதாக விண்ணப்பித்து உள்ளவர்களின் தகுதியான அனைவருக்குமே ரேஷன் கார்டு வழங்கப்படும்.
தற்போது வரை ரேஷன் கடைகளில் விரல் ரேகை பதிவு மூலம் பொருட்கள் வழங்கப்படுகிறது.ஆனால் முதியவர்கள் மற்றும் கூலி வேலைக்கு செல்வோர்களின் கை ரேகை சரியாக பதிவு ஆகாததால் ரேஷன் பொருட்கள் வாங்குவதில் அதிகம் சிரமம் ஏற்பட்டு வருகின்றது.
அதனை தவிர்க்கும் நோக்கில் கருவிழி பதிவு மூலம் ரேஷன் பொருட்கள் வாங்கும் முறை முதன் முறையில் சென்னையில் உதயநிதி ஸ்டாலின் அறிமுகம் செய்தார்.அதனையடுத்து ரேஷன் கடைகளில் நேரடியாக வந்து பொருட்கள் வாங்க இயலாதாவர்கள் அதற்கான உரிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்கினால் போதும்.பிற குடும்ப உறுப்பினர்கள் கூட சென்று ரேஷன் பொருட்களை வாங்கி கொள்ள முடியும் என தெரிவித்தார்.