மகளிர் உரிமை தொகை விண்ணபிக்க செயலி  அறிமுகம்!! தமிழக அரசு அதிரடி உத்தரவு!! 

0
72
Introduction of app for application of women's entitlement amount!! Tamilnadu government action order!!
Introduction of app for application of women's entitlement amount!! Tamilnadu government action order!!Introduction of app for application of women's entitlement amount!! Tamilnadu government action order!!

மகளிர் உரிமை தொகை விண்ணபிக்க செயலி  அறிமுகம்!! தமிழக அரசு அதிரடி உத்தரவு!!

கடந்த மாதம் மகளிர் உரிமை தொகை ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் பற்றிய தகவலை  நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்ல் அறிவித்தார்.  செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின், இந்த திட்டத்தினை தொடங்கி வைப்பார் என்றும் அறிவித்திருந்தார். இதற்காக 7,000 கோடி ஒதுக்கப்பட்டுளதாக தகவல் வந்தது.

தமிழக அரசு சில நாட்கள் முன்பு மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000ரூபாய் வழங்கும் திட்டத்தை அறிவித்திருந்தது. மேலும் அந்த உரிமை தொகையை அனைவருக்கும் வழங்காமல் தகுதி உள்ளவர்களுக்கு மட்டும் வழங்குவதாக அறிவித்திருந்தது.

இந்த பணி செய்ய இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தை சேர்ந்தவர்கள் மற்றும் சுய உதவி குழுக்களை சேர்ந்தவர்கள் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த பணியில் மொத்தம் 6000 பேர் ஈடுபட உள்ளார்கள். இதனை எளிய முறையில் பதிவு செய்ய வசதியாக தமிழக அரசு கலைஞர் மகளிர் உரிமை ஸ்கீம் என்ற செயலியை அறிமுகபடுத்தி உள்ளது.

மேலும் தன்னார்வலர்கள் அவர்களின் மொபைல் எண்ணை அதில் பதிவிட்டு உள்ள செல்ல வேண்டும். அதன்பின் வரும் கடவுச்சொல்லை பதிவிட வேண்டும். அதனையடுத்துள் அதில் புதிய படிவம் மற்றும் சமர்பிக்கப்பட்ட படிவம் இரு பிரிவுகளில் இருக்கும். அதில் புதிய படிவத்தை தேர்வு செய்ய வேண்டும்.

மேலும் அதில் விண்ணப்பிக்க உள்ளவரின் பெயர் மற்றும் முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் சமர்பிக்க வேண்டும். அதனால் இந்த செயலி பொது மக்கள் பயன்பாட்டிற்கு கிடையாது என்று அறிவித்துள்ளது. இது குறித்து தன்னார்வலர்களுக்கு மட்டும் பயற்சி அளிக்கப்படும்.

 

Previous articleசன்னி லியோன் வேதம் ஓதியது போல விமர்சித்த ரோஜா!! அதிரடி பதில் கொடுத்த நடிகை!! 
Next articleசாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் ஆடி மாத சிறப்பு பூஜை!! பக்தர்கள் சாமி தரிசனம்!!