ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி! இசை நிகழ்ச்சி நடத்தும் பிரபலங்கள்!!

0
355
#image_title
ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி! இசை நிகழ்ச்சி நடத்தும் பிரபலங்கள்!
நாளை அதாவது மே 28ம் தேதி நடக்கும் ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் இசை நிகழ்ச்சி நடத்துவதற்கு இசை பிரபலங்கள் கலந்து கொள்ள போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடர் அதாவது 16வது ஐபிஎல் தொடர் இறுதிப் போட்டி நாளை அதாவது மே 28ம் தேதி அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.
நடப்பு ஐபிஈல் தொடரில் சென்னை, குஜராத், மும்பை, பஞ்சாப் உள்பட 10 அணிகள் பங்கேற்றது. இதில் குஜராத், சென்னை, லக்னோ, மும்பை ஆகிய நான்கு அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.
முதல் குவாலிபையர் சுற்றில் சென்னை அணியும் குஜராத் அணியும் மோதியது. இதில் சென்னை அணி வெற்றி பெற்று நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. எலிமினேட்டர் சுற்றில் லக்னோ அணியை வீழ்த்தி மும்பை அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
நேற்று அதாவது மே 26ம் தேதி நடைபெற்ற இரண்டாம் குவாலிபையர் சுற்றில் குஜராத் அணியும் மும்பை அணியும் விளையாடியது. நேற்று(மே 26) நடந்த இரண்டாம் குவாலிபையர் சுற்றில் வெற்றி பெற்று குஜராத் அணி இறுதி போட்டியில் நுழைந்தது. சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதும் ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி நாளை அதாவது மே28ம் தேதி 7.30 மணிக்கு அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.
நாளை நடக்கும் இந்த இறுதிப் போட்டிக்கு முன்பாக பிரபலங்கள் பங்கேற்கும்  நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் ராப் கலைஞர் டி.ஜே.நுக்லியா, பாடகி ஜோனிதா காந்தி, டிவைன் ஆகியோர் பங்கேற்று இசை நிகழ்ச்சி நடத்தப் பேவதாக தகவல் வெளியாகியுள்ளது. போட்டியை காண வரும் ரசிகர்களை கவர இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
Previous articleபுதியதாக கட்டப்பட்டுள்ளது நாடாளுமன்றமா? அல்லது மோடியின் எஸ்டேட்டா? சிவசேனா கட்சி விமர்சனம்!
Next articleஇன்று கனமழை பெய்ய போகும் மாவட்டங்கள்!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!