புதியதாக கட்டப்பட்டுள்ளது நாடாளுமன்றமா? அல்லது மோடியின் எஸ்டேட்டா? சிவசேனா கட்சி விமர்சனம்!

0
206
#image_title
புதியதாக கட்டப்பட்டுள்ளது நாடாளுமன்றமா? அல்லது மோடியின் எஸ்டேட்டா? சிவசேனா கட்சி விமர்சனம்!
நாளை அதாவது மே 28ம் தேதி திறக்கப்படவுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடம் வந்து நாடாளுமன்ற கட்டிடமா அல்லது பிரதமர் மோடி அவர்களின் எஸ்டேட்டா ஏன்று சிவசேனா கட்சி விமர்சனம் செய்துள்ளது.
நாளை அதாவது மே 28ம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் திறப்புவிழா நடைபெறவுள்ளது. இந்த திறப்பு விழாவிற்கு அனைத்து கட்சிகளுக்கும் மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த திறப்பு விழாவை முன்னிட்டு நாளை புதிய 75 ரூபாய் நாணயம் வெளியிடப்படவுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்கவுள்ளார்.
இந்த திறப்பு விழாவில் பாஜக கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் 25 கட்சிகள் பங்கேற்கும் என்று தெரிகிறது. இதையடுத்து 20  எதிர்கட்சிகள் இந்த திறப்பு விழாவை புறக்கணிக்கப் போவதாக கூட்டாக அறிக்கை வெளியிட்டது. இந்த எதிர்கட்சிகளின் முடிவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பற்றி சிவசேனா கட்சி விமர்சனம் செய்துள்ளது.
சிவசேனா கட்சி இது தொடர்பாக புதிய நாடாளுமன்ற கட்டிடம் வந்து நாடாளுமன்ற கட்டிடமா அல்லது பிரதமர் மோடி அவர்களின் எஸ்டேட்டா என்று விமர்சனம் செய்துள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி அவர்கள் திறந்து வைப்பதற்கு பல எதிர்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஜனாதிபதி என்பவர் நாட்டின் தலைவர். அவர்தான் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க வேண்டும் என்று கூறியுள்ளது.