இன்று கனமழை பெய்ய போகும் மாவட்டங்கள்!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

இன்று கனமழை பெய்ய போகும் மாவட்டங்கள்!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் மிக அதிகமாகவே காணப்பட்டது. சில மாவாட்டங்களில் வெயிலின் அளவு 106 டிகிரியை தொட்டது. அக்னி நட்சத்திரம் மே 04ம் தேதி தொடங்கி மே 29ம் தேதி வரை இருக்கிறது. ஆனாலும் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் சிறிது குறைந்து காணப்படுகிறது.

இந்நிலையில் இன்னும் ஒரு சில நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், வெப்ப சலனம் காரணமாகவும் பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இதன் படி இன்று , தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை, திருப்பூர், கள்ளகுறிச்சி, திருவண்ணாமலை, சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி உள்ளிட்ட 12 மாவாட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.