நடந்து முடிந்த தேர்வில் முறைகேடுகள்! மீண்டும் நடத்தப்படும் நீட் தேர்வு!
நீட் தேர்வு நடைமுறைக்கு வந்த நாள் முதல் நமது தமிழகம் நீட் தேர்வு ரத்து செய்யும்படி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.அந்தவகையில் இம்முறை திமுக ஆட்சி அமைந்தால் நிச்சயம் நீட்தேர்வு ரத்து செய்யப்படும் என்று கூறினர்.அவர்கள் ஆட்சி அமர்த்தியும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியவில்லை.ஒன்றிய அரசிடம் நீட் தேர்வு ரத்து செய்யும்படி தமிழக முதல்வர் பலமுறை கோரிக்கை மனு வைத்தார்.இருப்பினும் ஒன்றிய அரசு எதையும் கண்டுகொள்ளவில்லை.வழக்கம்போல் இம்முறையும் நீட் தேர்வு நடைபெற்றது.நடைபெற்ற நீட் தேர்வில் பல குளறுபடிகள் நடந்துள்ளதாக அந்தந்த மாநிலங்களில் புகார்கள் எழுந்த வண்ணம் ஆகவே இருந்தது.
இவ்வாறு பல முறைகேடுகள் நடந்துள்ளதால் தற்போது நடைபெற்ற நீட் தேர்வு ரத்து செய்து மறு நீட்தேர்வு வைக்குமாறு மாணவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் மனு கொடுத்துள்ளனர்.மாணவர்கள் தரப்பில் மனு தாக்கலை வழக்கறிஞர் மம்தா சர்மா அளித்துள்ளார்.அவர் மனுவில் முதலாவதாக கூறியிருப்பது, நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிஐ 4 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது.அதேபோல ராஜஸ்தானில், தேர்வுக்கு முன்னதாகவே தேர்வில் வரும் கேள்விகளை வெளியில் விட்ட ஆசிரியர்கள் மற்றும் கேள்விக்கான விடையை குறியீடுகளாக தேர்வு மையத்தில் மாணவர்களுக்கு கூறியது போன்ற முறைகேடுகளை அந்த மனுவில் குறிப்பிட்டு கூறியுள்ளார்.
அதேபோல சிபிஐயின் முதல் தகவல் அறிக்கையில் 2021 நீட் நுழைவு தேர்வு வினாத்தாள் கிரிமினல் சதித் திட்டத்தின் கீழ் கேள்வித்தாள் வெளியிடப்பட்டதில் புகழ்பெற்ற நீட் பயிற்சி மையங்களுக்கு தொடர்பு இருப்பதாக சிபிஐ கூறியதையும் வழக்கறிஞர் மம்தா சர்மா அந்த மனுவில் கூறியுள்ளார்.ராஜஸ்தான் மட்டுமல்லாமல் உத்தரப்பிரதேசம்,மராட்டியம் போன்ற மாநிலங்களிலும் தற்போது நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதாக காவல் துறையில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதையும் வழக்கறிஞர் அவரது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே தற்போது இரண்டாம் தேதி நடந்து முடிந்த நீட் தேர்வு முழுவதும் முறைகேடுகள் அரங்கேறி உள்ளது.அதனால் நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு மறு தேர்வு நடத்துவதற்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் மாணவர்கள் தரப்பில் கேட்டுள்ளார். இந்த மனுவானது விரைவில் உச்ச நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வர உள்ளது.