சர்க்கரை நோய் உள்ள ஆண்களுக்கு ஆண்மை குறைவு பிரச்சனையா? வெளிவந்த அதிர்ச்சி தகவல்!!

0
266

சர்க்கரை நோய் உள்ள ஆண்களுக்கு ஆண்மை குறைவு பிரச்சனையா? வெளிவந்த அதிர்ச்சி தகவல்!!

குழந்தையின்மைக்கு பல காரணங்கள் சொல்லப்பட்டு வருகிறது. தற்போதைய ஆய்வுகளின் படி நீரிழிவு நோய் குழந்தையின்மைக்கு ஒரு முக்கிய காரணியாக திகழ்கிறது. நீரிழிவு நோய் என்பது நமது உடல் இன்சுலினை சரியாக உற்பத்தி செய்யாமல் இருப்பது.

நீரிழிவு நோய் உயிருக்கு அதிகம் ஆபத்தானது இல்லை என்றாலும் குழந்தையின்மை பிரச்சினைக்கு வழிவகுக்கும். நீங்கள் ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ள திட்டமிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சரியாக பராமரிக்க வேண்டும். ஆண்களின் கருவுறுகளில் நீரிழிவு நோய்களின் தாக்கங்களை குறைக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பார்ப்போம்.

1. வெப்பநிலை:

நீரிழிவு நோய் ஆண்களின் கருவறுதலை சில வழிகளில் பாதிக்கலாம். விந்தணுக்களின் தரம் குறைதல், விந்தணுக்களின் எண்ணிக்கை குறைதல்,மட்டும் மைட்டோகாண்ட்ரியல் பாதிப்பு. எனவே ஆண்கள் அதிக வெப்ப நிலைக்கு வெளிப்படுதலை தவிர்க்குமாறு பரிந்துரைக்கப்படுகிறது.

2. சோர்வு:

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஆண்கள் அதிகம் உடல் சோர்வை அனுபவிக்கிறார்கள். இது  ஆண்களின் கருவுறுதலில் நீண்ட நாள் தாக்கத்தை ஏற்படுத்தாது என்றாலும் மருத்துவரை அணுகி உரிய ஆலோசனை பெற வேண்டும்.

3. ஹார்மோன் சமநிலைன்மை:

நீரிழிவு உடலில் இன்சுலின் சமநிலை இன்மையால் இனப்பெருக்க ஹார்மோன்களின் அளவையும் பாதிக்கிறது. மருத்துவரின் ஆலோசனையை பெறுவதன் மூலம் ஹார்மோன் சமநிலையை சரி செய்ய முடியும்.

4.  ஆக்சிஜனேற்றம் நிறைந்த உணவுகள்:

நீரிழிவு நோய் ஆண்  கருவுறுதலோடு தொடர்புடையதாக உள்ளது. உயர் ரத்த சர்க்கரை ரேடிக்கல்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். இது மரபணு பாதிப்பு மற்றும் கருவுறாமைக்கு வழிவகுக்கும். எனவே ஆண்கள் ஆக்சிஜனேற்றம் மிகுந்த உணவை சேர்த்துக் கொள்ளவும்.

5. உடற்பயிற்சி:

இன்சுலின் எதிர்ப்பு சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட ஆண்களை பருமனாக மாற்றக்கூடும். இது அவர்களின் பெற்றோராகும் திறனை குறைக்க கூடும். முறையான உடற்பயிற்சிகள் செய்வதன் மூலம் இந்த குறையை நீக்கலாம்.

6. விந்து தள்ளல்:

நீரிழிவு நோயாளிகளின் அடுத்த பிரச்சனை பிற்போக்க விந்து தள்ளல். இதனால் விந்து கருப்பைக்கு செல்வதற்கு பதில் சிறுநீர் பைக்கு செல்கிறது. சரியான ஆலோசனை மற்றும் மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் இதனை தவிர்க்கலாம்.

7. உணர்ச்சி ஆதரவு:

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஆண்கள் லிபிட்டோ இழப்பை அனுபவிக்கிறார்கள். இது கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது. இவர்கள் தங்கள் துணையுடன் வெளிப்படையான உறவு மற்றும் திறந்த விவாதம் ஆகியவற்றை பேணுவது அவசியம்.

நீரிழிவு நோயாளிகள் கருத்தரிக்க முயற்சிக்கும் முன் மூன்று மாதங்களுக்கு சர்க்கரையின் அளவை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். இது கர்ப்பத்துடன் தொடர்புடைய நீரிழிவு அபாயங்களை குறைக்கும்.

Previous articleவிருச்சிகம்  ராசி – இன்றைய ராசிபலன்!! உங்களுக்கு சிந்தித்து செயல்பட்டு சிறப்புகளை பெற வேண்டிய நாள்!
Next articleதனுசு ராசி – இன்றைய ராசிபலன்!!மனதில் இருந்து வந்து குழப்பங்கள் மறையும் நாள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here