அரசு வாகனமா?  இல்லை திமுக பிரமுகர் வாகனமா?

Photo of author

By Parthipan K

அரசு வாகனமா?  இல்லை திமுக பிரமுகர் வாகனமா?

Parthipan K

Updated on:

அரசு வாகனமா?  இல்லை திமுக பிரமுகர் வாகனமா?

கரூரில் அரசு முத்திரையுடன் கூடிய கார் ஒன்றில் திமுக கட்சி கொடி பொருத்தப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்த கார் அரசு வாகனம் என்றும் சொல்லப்படுகிறது.

கரூர் மாநகரில் ஒரு கார் ஒன்று விசித்திரமாக வளம் வந்து கொண்டியிருக்கிறது. அந்த காரில் அரசு முத்திரையுடன், இந்து சமய அறநிலைத்துறை, மாவட்ட அறங்காவலர் குழு – கரூர் மாவட்டம் என அச்சிடப்பட்ட பெயர் பலகையும் பொருத்தப்பட்டுள்ளது. அதே காரில் திமுக கொடியும் பொருத்தப்பட்டு உள்ளது. இந்த கார் விவகாரம் மக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. இந்த கார் அரசு வாகனமா அல்லது திமுக கட்சி சார்புடையவரின் வாகனமா?

இந்த கார் அரசு வாகனம் என்றால், ஏன் இதில் திமுக கட்சி கொடியை பறக்க விட வேண்டும்? இது திமுக கட்சி பிரமுகர்களுடைய கார் என்றால் அது ஏன் அரசு முத்திரை இடம்பெற வேண்டும் என்று கரூர் மாவட்ட பொதுமக்கள், பத்திரிகையாளர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த விவகாரம் குறித்து கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், இந்த விவகாரம் ஆளும்கட்சியின் அராஜகத்தை காட்டுவதாகவும்; அரசு அதிகாரிகள் தொடர்ந்து ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.