இந்தியாவின் முதல் ட்ரோன் சோதனை மையம் தமிழ்நாட்டில் :  அமைச்சர் பி.டி.ஆர் அறிவிப்பு!!

0
41

இந்தியாவின் முதல் ட்ரோன் சோதனை மையம் தமிழ்நாட்டில் :  அமைச்சர் பி.டி.ஆர் அறிவிப்பு!!

 

இந்தியாவின் முதல் ட்ரோன் பொது சோதனை மையம் தமிழ்நாட்டில் அமைய உள்ளது குறித்து தமிழக தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

 

ஆளில்லா விமானம் :

 

தமிழ்நாட்டில் ஆளில்லா விமானம் தயாரிக்கும் தொழில் நிறுவனங்கள், மோட்டார்கள், பேட்டரி உட்பட பல்வேறு பாகங்களை தனித்தனி மையங்களில் சோதனை செய்வதால் செலவினம் அதிகரிப்பதோடு, சோதனைகளை மேற்கொள்ள காலதாமதமும் ஆகின்றது. இந்த இடர்பாடுகளை களையும் நோக்கத்துடன் ஒன்றிய அரசின் பாதுகாப்பு உள்கட்டமைப்பு சோதனை திட்டத்தின் கீழ் (DTIS), இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த ஆளில்லா விமான சோதனை மையத்தை (unmanned Aerial Systems Common Testing Centre) அமைக்க TIDCO நிறுவனம் திட்டமிட்டது.

 

அதன் அடிப்படையில், Keltron, Sense image, Standard Testing & Compliances மற்றும் Aviksha Retailers முதலான நான்கு நிறுவனங்கள் TIDCO- வுடன் இணைந்து ரூ. 45 கோடி மதிப்பீட்டில் ஆளில்லா விமான சோதனை மையத்தை அமைக்க உள்ளன. இந்த சோதனை மையம், ஆளில்லா விமானத்தின் ஆராய்ச்சி, வடிவமைப்பு, மேம்பாடு, உற்பத்தி மற்றும் சோதனைகளுக்குத் தேவையான பல்வேறு வசதிகளை ஒரே இடத்திலேயே சர்வதேச தரத்தில் வழங்கும்.

 

சோதனை மையம் :

 

இந்த சோதனை மையம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லம் வடகாலில் உள்ள சிப்காட் தொழிற்பூங்காவில் சுமார் 2.3 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படவுள்ளது. ஆளில்லா விமான உற்பத்தியில் தமிழ்நாடு சர்வதேச மையமாக திகழவும் பாதுகாப்புத் துறையில் இந்தியாவின் தற்சார்புத் தேவையை பூர்த்தி செய்யவும் இச்சோதனை மையம் வழிவகுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தொழில்நுட்பத்தில் நம் மாநிலமான தமிழ்நாடு இன்னும் பல மடங்கு வளர வேண்டும் என தொழில்நுட்ப நிபுணர்கள் கருத்து  தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

author avatar
Parthipan K