அடையாள ஆவணமாகிறதா? பான் கார்டு! மத்திய பட்ஜெட்டில் வெளிவந்த திடீர் அறிவிப்பு!
நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனாதிபதி திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று பொருளாதார அறிக்கையை தாக்கல் செய்தார்.
இரண்டாவது நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு கடந்த ஆண்டை விட 66 சதவீதம் கூடுதலாக இந்தாண்டு சுமார் 79 ஆயிரம் கோடி இத்திட்டத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் கழிவு நீர் சுத்தம் செய்யும் பணியில் இனி மனிதர்கள் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள். அதற்கு பதில் இயந்திரங்களை உபயோகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இனிமேல் மனிதர்கள் அல்லாமல்100% சதவீதம் இயந்திரங்களை மட்டுமே கொண்டு கழிவுநீர் அகற்றும் பணி நடைபெறும்.
நாடு முழுவதிலும் நூறு சிறப்பு போக்குவரத்து திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னுரிமை வழங்கும் வகையில் முக்கியமான 100 சிறப்பு போக்குவரத்து திட்டங்களுக்கு 75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் ரூபாய் 7000 கோடி மின்னணு நீதிமன்றங்கள் அமைக்க ஒதுக்கப்பட்டுள்ளது.
அடுத்து ஆதார் மற்றும் பான் டிஜிட்டல் லாக்கர் முறை ஆகியவை தனிநபர் அடையாளத்துக்காக பிரபலப்படுத்தப்படும் என அவர் தனது அறிக்கையில் தெரிவித்தார். இனிவரும் காலங்களில் பான் அடையாள எண்ணையும் தனிநபர் அடையாள ஆவணமாக பயன்படுத்துவதற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனால் முக்கியமான சேவைகளுக்கு பான் எண்ணை அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம்.