வாயை சுற்றி கருமையாக இருக்கிறதா?? அப்படியென்றால் இந்த டிப்ஸ் உங்களுக்குத்தான்!!
வாயை சுற்றி உள்ள கருமை நீங்குவதற்கு எளிய முறை.வாயை சுற்றி கருப்பு படலம் உண்டாக ஹைப்பர்- பிக்மெண்டேஷன்., ஹார்மோன் சமநிலையின்மை மற்றும் பல காரணங்களால் உண்டாகலாம். இது பொதுவானவை. பெரும்பாலும் மேக் அப் வழியாக அதை மறைக்க செய்கிறோம்.
உங்களில் ஒருசிலருக்கு உதட்டை சுற்றி மற்றும் வாயை சுற்றி உள்ள பகுதிகள் கருமையை நிறத்தில் இருக்கலாம். இது பலருக்கும் அவர்களின் முக அழகை பாதிக்கும் வகையில் அமைந்திருக்கும்.
அவர்கள் இந்த அற்புதமான எளிமையான முறையை பின்பற்றினால் கருமையை போக்கலாம் குறுகிய காலத்தில்.
எனவே இதனை போக்குவதற்கு இயற்கையாக வீட்டில் செய்யக்கூடிய வைத்தியம்.
தேவையான பொருட்கள்:
ஆரஞ்சு பழம் தோல் பொடி. காய்ச்சாத பால்.
தேன்.
கற்றாழை ஜெல்.
செய்முறை:
1: முதலில் ஒரு கிண்ணத்தில் 1 டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு பழம் தோல் பொடி சேர்த்துக் கொள்ளவும்.
2: பின்பு அதில் 1 டேபிள் ஸ்பூன் பால் சேர்த்துக் கொள்ளவும்.
3: பிறகு அதனை கலந்து விட்டு அதில் 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்.
இது ஒரு திரிஞ்சு போன பதத்தில் தான் இருக்கும் அதனை எடுத்து கருமை உள்ள இடத்தில் முகம் கழுத்து போன்ற இடத்தில் நன்றாக தேய்த்துக் கொள்ளவும் ஒரு 20 நிமிடத்திற்கு மசாஜ் செய்யவும்.
முக்கியமாக மங்கு உள்ள இடத்தில் நன்றாக தேய்த்துக் கொள்ளவும்.
பிறகு முகத்தை கழுவி விட்டு கண்டிப்பாக மாஸ்டரைசர் க்ரீம் ஏதாவது ஒன்றை பயன்படுத்திக் கொள்ளவும்.
மற்றொன்று குறிப்பு:
தேவையான பொருட்கள்:
பால்.
தேன்.
செய்முறை:
1: ஒரு கிண்ணத்தில் 1 டேபிள் ஸ்பூன் காய்ச்சாத பால் சேர்த்து கொள்ளவும்.
2: பின்பு அதில் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்.
பிறகு காட்டனை எடுத்து அதனை தொட்டு கருமை உள்ள இடத்தில் நன்றாக தேய்த்து மசாஜ் செய்யவும். இவை ஒரு ஐந்து நிமிடம் செய்தால் போதும் பிறகு முகத்தை கழுவி விட வேண்டும்.
இதில் பயன்படுத்தி இருக்கும் அனைத்து பொருளுமே அதாவது மங்கு உள்ள இடத்தில் பயன்படுத்தினால் நல்ல ஒரு பலன் கண்டிப்பாக கிடைக்கும்.
முக்கியமாக தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். அதாவது மங்கு உள்ளவர்கள் ஒரு நாளைக்கு 4 லிட்டர் ஆவது தண்ணீர் கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும்.