நீங்க கேங்கா வந்தாலும் சரி சிங்கிளா வந்தாலும் சரி.. இங்க உங்களுக்கு இடம் இல்லை – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!!
அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தங்களின் ஆதரவுள்ள நிர்வாகிகளை முக்கிய பொறுப்புகளில் அமர்த்தி வரும் இந்த சூழலில் பன்னீர்செல்வம் பாராளுமன்ற தேர்தல் வருவதையொட்டி ஆலோசனை மேற்கொள்ள மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.
இந்தக் கூட்டத்திற்கு இபிஎஸ் அவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதை அடுத்து மீண்டும் இவர்கள் இணைய போகிறார்கள் என கட்சிக்குள் பரபரப்பாக பேசப்பட்டது.
ஆனால் இவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் எடப்பாடி அவர்கள் வரும் 27ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிப்பை வெளியிட்டு அதில் கலந்து கொள்ளப் போவதில்லை என்பது போல் தனது விருப்பத்தை தெரிவித்தார்.
இன்று மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நினைவு தினத்தை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், எம்ஜிஆர் அவர்களின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்திய கையோடு அங்கிருந்த செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அதில், எடப்பாடி அவர்கள் தலைமையில் கட்சி கட்டுப்பாடுடன் நடந்து கொண்டிருக்கும் வேளையில் அதிமுகவை ஒன்று சேர்க்கிறோம் என்ற பணியை சசிகலா ஏன் செய்ய வேண்டும்? அவர்தான் கட்சியை விட்டு விலகி விட்டாரே அவருக்கும் அதிமுகவுக்கும் என்ன சம்பந்தம்? அவர் வேண்டுமானால் டிடிவி தினகரன் மற்றும் பன்னீர் செல்வத்தை ஒருங்கிணைக்க முயற்சி செய்யட்டும் இவ்வாறு சரமாரியாக கேள்வி எழுப்பி பேசினார்.
மேலும்,ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழக்கூடாது என பழமொழி கூறி சசிகலாவை சுட்டிக்காட்டி பேசினார். சசிகலா அதிமுகவை ஒன்றிணைப்போம் என்றும் கூறும் கருத்தை யாரும் ஏற்க தயாராக இல்லை. அதனால் அவ்வாறு அவர் சொல்வது தேவையற்றது.
அதிமுகவில் சண்டை நிகழ்கிறது என்று பலரும் கூறி வருகின்றனர் ஆனால் அவ்வாறு கருத்து வேறுபாடு எதுவும் இங்கு இல்லை.
அதேபோல சசிகலா பன்னீர்செல்வம் மற்றும் தினகரன் இவர்கள் அனைவரும் தனித்தனியாக வந்தாலும் சரி சேர்ந்து வந்தாலும் சரி அவர்களுக்கு இங்கு இடம் இல்லை.அ
வர்கள் கட்சியில் மட்டுமின்றி கூட்டணியாக கூட சேர்த்துக் கொள்ள ஒருபோதும் சம்மதிக்க மாட்டோம். அதேபோல வரும் பாராளுமன்ற தேர்தலில் எடப்பாடி அவர்கள் எந்தெந்த இடங்களில் மற்றவர்களுக்கு ஒதுக்குகிறார்களோ அதை தான் அவர்கள் பெற முடியுமே தவிர யாரையும் கட்டாயப்படுத்த முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.
டிடிவி தினகரன் சசிகலா ஓ பன்னீர்செல்வம் இவர்கள் இன்றி எங்களது தலைமையில் தான் கூட்டணி அமையும் எனவும் கூறினார்.
தேபோல தற்பொழுது திமுக ஆட்சி மீது மக்களுக்கு பெரும் அதிருப்தி நிலவி வரும் வேலையில் முன்பு ஜெயலலிதாவின் திட்டங்களால் மக்கள் பயன் பெற்றதை பற்றி மக்களுக்கு எடுத்து கூறி வருகிறோம்.
இதுவே நாங்கள் ஆட்சியில் இருந்த பொழுது பொங்கல் பரிசாக 5000 கொடுங்கள் என எதிர்க்கட்சியாக இருந்த திமுக கேள்வி எழுப்பிய நிலையில், தற்போது ஆளும் கட்சியாக இருக்கும் பொழுது 1000 மட்டும் கொடுப்பது ஏன்? இந்தத் தொகையும் இவர்கள் தற்பொழுது வரப்போகும் பாராளுமன்ற தேர்தலால் தான் கொடுக்கிறார்கள் இல்லையென்றால் அதுவும் கிடையாது என்று குற்றம் சாட்டினார்.