கே எல் ராகுல் நீக்கப்படுவாரா?…. பேட்டிங் பயிற்சியாளர் சொன்ன தகவல் இதுதான்!
இந்திய அணியின் தொடக்க வீரர் கே எல் ராகுல் உலகக்கோப்பை தொடரில் தொடர்ந்து சொதப்பி வருகிறார்.
இந்திய அணி உலகக்கோப்பை சூப்பர் 12 லீக்கில் தொடர்ந்து இரு போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இன்று மூன்றாவது போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகிவிடும்.
இந்திய அணியின் பேட்டிங் மிக சிறப்பாக இருக்கும் நிலையில் தொடக்க ஆட்டக்காரரான கே எல் ராகுல் இரு போட்டிகளிலும் சொதப்பி வருகிறார். பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு எதிரான போட்டியில் ஒற்றை இலக்க எண்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் தந்தார்.
இதனால் அவர் இன்று நடக்கும் போட்டியில் இடம்பிடிக்க மாட்டார் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்த தகவலை இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோ மறுத்துள்ளார். அதில் “ ராகுலுக்கு மாற்று வீரராக நாங்கள் யாரையும் யோசிக்கக் கூட இல்லை. வெறும் இரண்டு போட்டிகளை வைத்து அவரைப் போன்ற ஒரு சிறந்த பேட்ஸ்மேனைக் குறை சொல்வது சரியில்லை. அவர் வலைப்பயிற்சியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவரை நீக்க வேண்டிய தேவை அணிக்கு இல்லை” எனக் கூறியுள்ளார்.
இன்றைய போட்டி மிக முக்கியமானப் போட்டி என்பதால் கே எல் ராகுலின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாக பார்க்கபடுகிறது. இந்திய அணியில் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.