மகளுக்கு திருமணம் செய்து வைத்தது குத்தமா? தந்தைக்கு ஜெயில்!

Photo of author

By Parthipan K

மகளுக்கு திருமணம் செய்து வைத்தது குத்தமா? தந்தைக்கு ஜெயில்!

15 வயதுக்குட்பட்ட சிறுமியை ஒரு வாலிபர் அல்லது வயது முதிர்ந்த ஆண் ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்தால் அதனை குழந்தை திருமணம்  என சட்டம் கூறுகின்றது.இந்நிலையில் சிதம்பரம் வடக்கு வீதியைச்  சேர்ந்தவர்  சோமசேகர்.இவர்  ஒரு தீட்சிதர்.இவருக்கு 14 வயதில் மகள் உள்ளார்.

இந்நிலையில் இவர்  கடந்த ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 24 வயதான தீட்சிதருக்கு  திருமணம் செய்து வைத்துள்ளார்.மேலும் இது குறித்து போலீசார்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அந்த தகவலின் பேரில் போலீசார் சோமசேகரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அதனைத்தொடர்ந்து அந்த சிறுமியிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.அந்த விசாரணையில் குழந்தை திருமணம் நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது. அதனையடுத்து தீட்சிதர் சோமசேகரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான மாப்பிள்ளை மற்றும் அவரது குடும்பத்தினரை தேடி வருகின்றனர்.