கஞ்சா போதையில் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட இளைஞருக்கு தர்ம அடி கொடுத்த பொது மக்கள் 

கஞ்சா போதையில் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட இளைஞருக்கு தர்ம அடி கொடுத்த பொது மக்கள்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பேருந்தில் பெண்மணியிடம் கஞ்சா போதையில் தவறாக நடந்து கொண்ட இளைஞரை அப்பகுதி பொதுமக்கள் பேருந்தில் இருந்து இறக்கி தர்மடி கொடுத்து கை கால்களை கட்டி காவல்துறையிடம் ஒப்படைத்தது பரபரப்பு ஏற்படுத்தியது

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே நேற்று இரவு புதுக்கோட்டையிலிருந்து மறமடக்கிக்கு 3ம் எண் நகரப் பேருந்து சென்றுள்ளது. அப்போது அந்த பேருந்தில் வன்னியன் விடுதியைச் சேர்ந்த பாண்டியன் என்பவர் கஞ்சா போதையில் பேருந்தில் சென்ற ஒரு பெண்மணியிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து பேருந்து அரையப்பட்டி பகுதியில் சென்ற போது அந்த இளைஞரை பேருந்தில் இருந்து கீழே இறக்கி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தர்மடி கொடுத்து அந்த இளைஞரின் கைகால்களை கட்டி பின்னர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.‌ சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அந்த இளைஞரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் வன்னியன் விடுதியை சேர்ந்த பாண்டியன் சில நேரங்களில் மனநிலை பாதிக்கப்பட்டவரை போல் செயல்படுவார் என்றும், நன்றாக பேசினாலும் அவர் இது போன்ற பல்வேறு செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களிடம் தர்மடி வாங்கி வருவதாகவும் அக்கிராமத்தினர் தெரிவித்துள்ளனர்.

தற்போது அந்த நபரைத் தாக்கிய வீடியோ வாட்சாப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.