நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிரதமரா? பாஜக வேட்பாளர் கங்கனா பேட்டி!

0
169
#image_title

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிரதமரா? பாஜக வேட்பாளர் கங்கனா பேட்டி!

பிரபல நடிகை கங்கனா ரனாவத் அவர்கள் பாஜக கட்சி சார்பாக இமாச்சலப் பிரதேச மாநிலம் மண்டி தொகுதியில் போட்டியிடுவதை முன்னிட்டு அவர்கள் அளித்த சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ் என்று கூறிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக கங்கனா ரனாவத் அவர்கள் இணையவாசிகள் மத்தியில் பெரும் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகி இருக்கின்றார்.

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் கலைகட்டி வரும் நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. இந்த நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது.

இதையடுத்து தேசிய மற்றும் மாநில கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கான பணிகளை செய்து வருகின்றனர். மேலும் வேட்பாளர்களும் தொண்டர்களும் விதவிதமான பரப்புரையை மேற்கொண்டு மக்களிடம் வாக்கு சேகரித்து வருகின்றனர். இதற்கு மத்தியில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் அவர்கள் இந்த தேர்தலில் இமாச்சல பிரதேச மாநிலம் மண்டி தொகுதியில் பாஜக கட்சி சார்பாக போட்டியிடுகிறார். இது மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகையும் பாஜக வேட்பாளருமான கங்கனா ரனாவத் அவர்கள் இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ் என்ன ஆனார் என்று குறிப்பிட்டு பேசியுள்ளார். இந்த வீடியோவை பகிர்ந்த நடிகர் பிரகாஷ் ராஜ் “பெரிய கட்சியின் கோமாளிகள் இதெல்லாம் நியாமா?” என்று பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவிற்கு கீழ் மற்றொரு நபர் “ஒரு நிகழ்ச்சியில் நடிகை ஆலியா பட் அவர்கள் இது போல ஒன்றை கூறிய பொழுது அவருக்கு வயது 19 என்று கூறினார்கள். ஆனால் 40 வயதை தாண்டி இருக்கும் நிலையில் தன்னை தானே தேசியவாதி என்று காட்டிக் கொள்ளும் நடிகை கங்கனா ரனாவத் அவர்கள் இந்த ஆண்டின் சிறந்த மேதை” என்று கூறியுள்ளார்.

அதே போல மற்றொரு நபர் “இவங்க இப்படித்தான். ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா 2014ல் சுதந்திரம் பெற்றது என்று கூறினார். தற்பொழுது இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ் என்று கூறுகிறார். வரலாற்றை மாற்றுவது மிகவும் அபத்தமான ஒன்று” என்று கூறியுள்ளார்.