ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை மீட்பு

0
165
#image_title

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை மீட்பு

கர்நாடகாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயதேயான குழந்தை 20 மணி நேர மீட்பு போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்கபட்டு உள்ளது.

கர்நாடக மாநிலம், விஜயபுரா மாவட்டத்திலுள்ள லச்சாயா என்ற கிராமத்தில் ஸ்வஸ்திக் முஜகொண்டா என்கிற 2 வயதாகும் ஆண் குழந்தை நேற்று முன்தினம் மாலையில் வீட்டிற்கு அருகில் விளையாட சென்றுள்ளது. அப்போது அருகிலுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சம்பந்தபட்ட குழந்தையின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.

இதைக் கேட்டு செய்வதறியாது திகைத்த குழந்தைகள் பெற்றோர் அருகில் உள்ள காவல் துறையினரிடம் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், தீயணைப்பு படையினர், மாநில பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் மருத்துவ குழு உள்ளிட்டோர் குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

குழந்தை விழுந்த அந்த ஆழ்துளை கிணற்றுக்கு அருகிலேயே 21 அடி ஆழத்தில் மற்றொரு துளையை போட்டு அதன் வழியாக பக்கவாட்டில் மேலும் ஒரு துளையிட்டு அதன் மூலமாக குழந்தையை மீட்டுள்ளனர். 20 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்ட குழந்தையானது உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது. அங்குள்ள மருத்துவ குழுவினரும் குழந்தையை பரிசோதித்தப்பின் உயிருடன் உள்ளதை உறுதி செய்துள்ளனர்.

அந்த ஆழ்துளை கிணறு குழந்தையின் தாத்தாவால் தான் தோண்டப்பட்டுள்ளது. அதில் தண்ணீர் வராமல் போனதால் அப்படியே விட்டு உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த ஆழ்துளை கிணற்றை உடனடியாக மூட வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.