பான் இந்தியா படத்தில் நடிகர் சூர்யா? ரசிகர்கள் உற்சாகம்!

0
165
Is Surya the actor in Pan India? Fans excited!
Is Surya the actor in Pan India? Fans excited!

பான் இந்தியா படத்தில் நடிகர் சூர்யா? ரசிகர்கள் உற்சாகம்!

தமிழில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் சூர்யா. இவருடைய நடிப்பில் சில முக்கிய திரைப்படங்கள் உருவாகி கொண்டிருகின்றது.அந்த வகையில் தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யாவின் 42  வது திரைப்படம் உருவாகி கொண்டிருகிறது.அந்த படத்தின் இராண்டாவது பாகம் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் இயக்குனர் நாக் அஷ்வின் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ப்ராஜெக்ட் கே என்ற படம் அனைவருக்கும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த படம் சுமார் 500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்படுகிறது எனவும் கூறப்படுகிறது.அந்த படத்தில் அமிதாப் பச்சன் ,தீபிகா படுகோண் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.அந்த படத்தில் நடிகர் சூர்யாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருகின்றது என்ற தகவல் கசிந்துள்ளது. இந்த தகவல் எந்தளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

author avatar
Parthipan K