ஜெயிலரை குடும்பத்துடன் தீ வைத்து கொல்ல முயற்சி! மூவர் நீதிமன்றத்தில் சரண்!

0
144
Attempt to kill the jailer with his family on fire! Surrender to the court of three!
Attempt to kill the jailer with his family on fire! Surrender to the court of three!

ஜெயிலரை குடும்பத்துடன் தீ வைத்து கொல்ல முயற்சி! மூவர் நீதிமன்றத்தில் சரண்!

கடந்த 28 ஆம் தேதி சப் ஜெயிலர் குடும்பத்தையே எரித்து கொல்ல முயன்ற கும்பலில் தற்பொழுது மூவர் நீதிமன்றத்தின் ஆஜராகி உள்ளனர். கடலூரில் கடந்த மாதம் 28ஆம் தேதி அதிகாலை நேரத்தில் மர்ம நபர்கள் சிலர் இந்த சப்ஜெய்லர் வீட்டில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளனர். அதிர்ஷ்ட வசமாக சப் ஜெய்லர் குடும்பத்தினர் வேறோர் அறையில் உறங்கிய கொண்டிருந்ததால் அனைவரும் உயிர் தப்பினர்.

கடலூர் மத்திய சிறை வார்டனாக செந்தில்குமார் உள்ளார். இவர் பல நாட்களாக அச்சிறையில் உள்ள குற்றவாளியான தனசேகர் என்பவருக்கு  உதவி செய்து வந்துள்ளார். இவ்வாறு உதவி செய்து வருவதை அறிந்த ஜெயிலர் மணிகண்டன் இவரை கண்டித்துள்ளார். மேற்கொண்டு உயர் அதிகாரிகளிடம் இது பற்றி கூறி அவருக்கு மெமோ வாங்கி தந்துள்ளார். இதனால் கோவம் அடைந்த செந்தில்குமார் தன்னுடன் சக கூட்டாளியாக குற்றவாளி தனசேகரை   கூட்டு சேர்ந்து ஜெயிலர் குடும்பத்தையே கொல்ல திட்டமிட்டுள்ளனர்.

அதன்படி கைதியின் சக கூட்டாளிகளை  கொண்டு அக்குடும்பத்தை கொல்ல முயற்சித்துள்ளனர். இதன் பின்னணியில் ஆறு பேர் இருக்கவே மூன்று பேர் மட்டுமே போலீசார் கைது செய்தனர். மீதமுள்ளவர்கள் தலைமறைவான நிலையில் தற்போது நீதிமன்றத்தில் அந்த மீதமுள்ள மூவரும்  சரண் அடைந்து உள்ளனர். திருவள்ளுவரை சேர்ந்த மணவாளன், கார்த்தி, இளந்தமிழன் ஆகியோர் பட்டுக்கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சரணடைந்த உள்ளனர்.