உடல் ரொம்ப ஹீட்டா இருக்கா? அப்போ இந்த ட்ரிங்க் குடித்து உடலை கூல் ஆக்குங்கள்!!

Photo of author

By Divya

உடல் ரொம்ப ஹீட்டா இருக்கா? அப்போ இந்த ட்ரிங்க் குடித்து உடலை கூல் ஆக்குங்கள்!!

உங்கள் உடலில் உள்ள அதிகப்படியான சூடு தணிந்து புத்துணர்வு கிடைக்க இந்த ட்ரிங்க்ஸ் அருந்துவது நல்லது.

*புதினா ட்ரிங்க்

ஒரு கப் நீரில் 5 புதினா இலை,1/4 தேக்கரண்டி சீரகம் மற்றும் வட்டமாக நறுக்கிய எலுமிச்சை துண்டுகள் இரண்டு சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து குடித்தால் உடல் சூடு தணியும்.

*வெள்ளரி பழ சாறு

ஒரு வெள்ளரி பழத்தின் சதைப்பற்றை நீர் விட்டு அரைத்து சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் உடல் சூடு தணியும்.

*துளசி ட்ரிங்க்

ஒரு கப் நீரில் 10 துளசி இலைகளை போட்டு ஊறவைத்து குடித்து வந்தால் உடலில் உள்ள சூடு குறைந்து புத்துணர்வு கிடைக்கும்.

*இஞ்சி பானம்

ஒரு கிளாஸ் குளிர்ந்த நீரில் ஒரு துண்டு இடித்த இஞ்சி,ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து குடித்தால் உடல் சூடு குறையும்.

*நெல்லிக்காய் ட்ரிங்க்

ஒரு பெரிய நெல்லிக்காயை விதை நீரை அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்.இந்த சாற்றை ஒரு கிளாஸ் குளிர்ந்த நீரில் கலந்து குடித்தால் உடலில் உள்ள அதிகப்படியான சூடு தணியும்.

*திருநீற்றுப்பச்சிலை விதை

ஒரு கிண்ணத்தில் 1/2 தேக்கரண்டி திருநீற்றுப்பச்சிலை விதை சேர்த்து தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

பின்னர் ஒரு கிளாஸ் லெமன் ஜூஸில் ஊறவைத்த விதையை கலந்து குடித்தால் உடல் குளிர்ச்சியடையும்.