குழம்பில் உப்பு, காரம் சற்று தூக்கலாக இருக்கா? அப்போ அதை சரி செய்ய சூப்பரான டிப்ஸ் இதோ!

Photo of author

By Sakthi

குழம்பில் உப்பு, காரம் சற்று தூக்கலாக இருக்கா? அப்போ அதை சரி செய்ய சூப்பரான டிப்ஸ் இதோ!

என்னதான் 5 ஸ்டார்கள் கொண்ட உணவகங்களில் விருந்து சாப்பிட்டாலும் நம்முடைய வீட்டில் சமைத்த சாப்பாடு சாப்பிடுவது போல வராது. அனைவருக்கும் வீட்டு சாப்பாடு என்பது மிகவும் பிடிக்கும். ஏன் என்றால் வெளியே கிடைக்கும் உணவுகளில் இருக்கும் சத்துக்களை விட வீட்டில் சேமிக்கப்படும் உணவுகளில் அதிக சத்துக்கள் இருக்கின்றது.

அதிக சத்துக்கள் இருப்பது போலவே சில சமயங்களில் நம்முடைய வீட்டு சமையலில் உப்பு, காரம் போன்ற சுவைகளும் சற்று அதிகமாகவே இருக்கும். அந்த சமயங்களில் நாம் உணவுகளை சாப்பிடுவது என்பது யாருக்கும் பிடிக்காது.

உப்பில்லாத பண்டம் குப்பைக்கே என்பது போலவே அதிக உப்பு இருந்தாலும் அது குப்பைக்குத் தான் செல்லும். அந்த வகையில் சமையலில் உப்பு, காரம்,  போன்ற சுவைகள் அதிகமானால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.

உப்பு, காரம், போன்ற சுவை அதிகமானால் செய்ய வேண்டியவை…

* குழம்பில் காரம் அதிகமாக இருந்தால் உருளைக் கிழங்கை வெட்டி அதில் சேர்க்கலாம். உருளைக் கிழங்கு குழம்பில் உள்ள அதிகப்படியான காரத்தை உறிஞ்சு விடும்.

* குழம்பில் அதிக காரம் இருந்தால் அதில் ஒரு டீஸ்பூன் அளவிற்கு எலுமிச்சம் பழத்தின் சாறு சேர்க்கலாம். எலுமிச்சம் பழச்சாறு காரத்தை குறைக்கும்.

* குழம்பில் அதிகப்படியாக உப்பு இருந்தால் பால் சேர்க்கலாம். சைவக் குழம்புகள் வைக்கும் பொழுது அதிகப்படியான உப்பு சேர்ந்துவிட்டால் சிறிது பால் சேர்த்தால் உப்பு குறைந்து விடும். அதே போல காரமும் குறையும்.

* குழம்பில் அதிக காரம் இருந்தால் காரத்தை குறைக்க புளித்த தயிரை சேர்க்கலாம். அடுப்பை அணைத்துவிட்டு புளித்த தயிர் சேர்த்தால் குழம்பில் உள்ள காரம் குறையும்.