முடி கொத்து கொத்தாக கொட்டுகிறதா!! உண்மை காரணம் என்ன!! 

0
136
Is the hair falling out in clumps!! What is the real reason!!
Is the hair falling out in clumps!! What is the real reason!!

முடி கொத்து கொத்தாக கொட்டுகிறதா!!   உண்மை காரணம் என்ன!!

நம்மில் பல பேருக்கு முடி உதிர்தல் என்பது மிகப்பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது. என்னதான் பல பிராண்ட் எண்ணெய் தேய்த்தாலும் பல மூலிகைகள் உபயோகித்தாலும் பணம்தான் குப்பையாக செலவாகிக் கொண்டிருக்கிறது.                                                                  இதை பயன்படுத்தி பல கார்ப்பரேட் கம்பெனிகள் இதை உபயோகித்து பாருங்கள் ஒரு முடி கூட கொட்டாது என மார்கெட்டிங் செய்து பணத்தை வசூல் செய்கிறார்கள்.

ஆனால் உண்மையில் முடி கொட்டுவதற்கான காரணம் என்ன? எதனால் முடி கொட்டுகிறது என்ற அறிவியல் பூர்வ காரணம் என்ன என்பதை அறிய வேண்டும். உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை மூலம் எப்படி முடி உதிர்வதை தடுக்கலாம் என்பதை இதில் பார்ப்போம்.

முதலில் முடியானது அழகு படுத்துவதற்க்கு மட்டுமல்ல நம்முடைய உடல் உஷ்ணத்தை சரி செய்ய உதவி புரிகிறது. நம்முடைய தோல் மென்மையாக இருப்பதற்கு ஒரு முக்கியமான திரவம் இதன் மூலம் சுரக்கிறது.                                                                                                    தோராயமாக நம் உடலில் 5 லட்சம் முடிகள் உள்ளது. அதில் நம்முடைய தலையில் குறைந்தபட்சம் ஒன்றரை லட்சம் முடிகள் உள்ளது. இயற்கையாகவே ஒரு நாளைக்கு 100லிருந்து 200 கட்டாயம் கொட்டும் உடனே இதற்கு பயப்பட வேண்டாம்.இது இயல்பான ஒன்றே.

முடி உதிர்வுக்கு உண்மை காரணம்:

திடீரென கொத்து கொத்தாக முடி கொட்டினால் மன அழுத்தம், திடீர் எடை குறைப்பு, சமீபத்தில் ஏற்பட்ட டெங்கு போன்ற காய்ச்சல், தைராய்டு, இரும்பு சத்து குறைபாடு ரத்தசோகை, அதிக மாத்திரை உபயோகிக்கிறவர்கள் இது எல்லாம் தான் முக்கிய காரணம்.

எப்படி தடுக்கலாம்: தூக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது கட்டாயம் 8மணி நேர தூக்கம் அவசியம். இரும்பு சத்து மிகுந்த உணவுகள், கீரை வகைகள், அசைவத்தில் ஈரல், மேலும் பாதாம் போன்ற நட்ஸ், புரத உணவுகளை அன்றாடம் எடுத்துக்கொண்டால் முடி உதிர்வை தடுக்கலாம். முக்கியமாக மன அழுத்தத்தை குறைத்தாலே பாதி பிரச்சனை தீர்ந்துவிடும்.

Previous articleமுகத்தை எப்போதும் பளபளப்பாக வைத்திருப்பது ரொம்ப ஈஸி எப்படி தெரியுமா?? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!
Next articleராக்கெட் வேகத்தில் எடையை குறைக்கணுமா!!அப்போ தண்ணீரை இப்படி ஃபாலோ பண்ணுங்கள்,ஆச்சரியப்படுவீர்கள்!!