முகத்தை எப்போதும் பளபளப்பாக வைத்திருப்பது ரொம்ப ஈஸி எப்படி தெரியுமா?? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!

0
37

முகத்தை எப்போதும் பளபளப்பாக வைத்திருப்பது ரொம்ப ஈஸி எப்படி தெரியுமா?? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!

இந்த மாசு நிறைந்த உலகில் நமது தோல் மிக எளிதாக மாசடைந்து விடுகிறது. இருப்பினும், சில எளிமையான வழிகளைப் பின்பற்றினாலே போதும், முகத்தை எப்போதும் இளமையாக வைத்துக் கொள்ள முடியும்.

இங்கு யாராலும் முதுமை அடைவதில் இருந்து தப்பிக்கவே முடியாது. ஒருவர் வயதாக வயதாக அவர்களின் உடல் தோற்றத்தில் பல மாற்றங்கள் ஏற்படத் தொடங்கும். இந்த மாற்றங்கள் அனைத்தும் முதலில் ஒருவரின் முகத்தில் தான் தெரியும்.

மேலும், நமது முகமே நாம் எப்படி இருக்கிறோம் என்பதைக் காட்டிக் கொடுத்துவிடும். இதனால் நாம் நமது முகத்தைப் பராமரிக்க வேண்டியது ரொம்பவே முக்கியமாகும். முகத்தை எப்படிப் பராமரிக்க வேண்டும் அதற்குச் செய்ய வேண்டிய ஈஸியான காரியங்கள் என்ன என்பதைப் பார்க்கலாம்.

வயதாகும்போது, நமது உடல் மற்றும் தோற்றத்தில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கும். ரசாயனம் நிறைந்த அழகுசாதன பொருட்கள், காற்று மாசு ஆகியவை நமது தோல் மேலும் மோசமாவதற்கு வழிவகுக்கிறது. நமது தோல் அதன் இயற்கையான பளபளப்பை இழக்கக்கூடும்.இதுவே பலருக்கும் மனஅழுத்தத்தை ஏற்படுத்துவதாக அமைந்துவிடுகிறது.

எனவே, உங்களுக்கு பளபளப்பான சருமத்தை வழங்கும் ஒரு பொருளை நாங்கள் உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம். அது என்ன என்றால் பீட்ரூட் ஃபேஸ் மாஸ்க்குகள்.

பீட்ரூட் ஊட்டச்சத்துக்களால் நிறைந்துள்ளது மற்றும் சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். மந்தமான சருமத்தால் நீங்கள் கவலையாக இருந்தால், பீட்ரூட் ஃபேஸ் மாஸ்க்குகளை நீங்கள் முயற்சி செய்யலாம்.

அவை உங்கள் முகத்திற்கு உடனடி மற்றும் இயற்கையான பிரகாசத்தை சேர்க்கும். பீட்ருட் ஃபேஸ் மாஸ்க்குகளை வீட்டிலேயே எவ்வாறு செய்யலாம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்

பீட்ரூட்

சாதம்

கற்றாழை

தயிர்

செய்முறை

1: முதலில் ஒரு பீட்ரூட்டை எடுத்து அதன் தோல் முழுவதையும் சீவி விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

2: பின்னர் இவற்றுடன் இரண்டு ஸ்பூன் சாதத்தை சேர்த்துக் கொள்ளவும்.

3: இத்துடன் இயற்கையாக கிடைக்கும் கற்றாழை ஜெல்லை எடுத்துக் கொள்ளவும்.

4: இந்த பொருட்களுடன் தயிர் இரண்டு ஸ்பூன் சேர்த்துக் கொள்ளவும்.

5: இவை அனைத்தையும் சேர்த்த பின்பு மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு மையா அரைக்கவும்.

இந்த கலவையை வாரத்தில் மூன்று நாட்களுக்கு தொடர்ந்து தடவி வந்தால் முகம் பளபளவென்று மாறும். இதில் சில வாரங்களிலேயே ஏற்படும் மாற்றங்களை நீங்கள் கவனிக்க முடியும்.

மேலும் பீட்ரூட் சருமத்திற்கு மிகவும் உகந்த காய்கறி. ஆனால் சருமத்தில் பயன்படுத்துவதற்கு முன்பு பேட்ச் டெஸ்ட் செய்து கொள்வது நல்லது.

உங்களுக்கு நாள்பட்ட தோல் நிலை இருந்தால், பீட்ரூட்டை தோலில் பயன்படுத்துவதற்கு முன்பு முதலில் உங்கள் தோல் மருத்துவரை அணுகி ஆலோசனைபெறுவது நல்லது.

author avatar
Parthipan K