இதயத்தில் சுருக்கு சுருக்கென்று குத்துகிறதா? நீங்கள் பண்ண வேண்டியது இதுதான்!!
சில நேரங்களில் நெஞ்சு பகுதியில் ஊசி குத்துவது போன்ற உணர்வு ஏற்படும்.உடனே அது ஹார்ட் அட்டாக் என்று நினைத்து பயப்பட வேண்டாம்.நம் வயிற்றில் உள்ள பெருங்குடலின் இடது பகுதியில் அதிகப்படியான வாயு தேங்கி இருப்பதினால் தான் நெஞ்சில் இது போன்ற வலி உணர்வு தோன்றுகிறது.நம் மனதில் அதிகப்படியான வலிகள்,பதற்றம் ஏற்படுதல் போன்ற காரணங்களாலும் நெஞ்சில் வலி ஏற்படும்.இதற்கு இயற்கை முறை மருத்துவத்தை பின்பற்றி வந்தோம் என்றால் எளிதில் இந்த பிரச்சனை சரியாகும்.
தேவையான பொருட்கள்:-
*தேங்காய் பால் – 5 ஸ்பூன்
*இஞ்சி – சிறுதுண்டு
*முந்திரி – 2
*உலர் திராட்சை – 2
*ஏலக்காய் -1
*பூண்டு – 5 பற்கள்
*பால் – 2 ஸ்பூன்
*மஞ்சள் – 1 ஸ்பூன்
செய்முறை:-
1.முதலில் 1/4 மூடி தேங்காயை துருவி அதனை அரைத்து ஒரு டம்ளரில் வடிகட்ட வேண்டும்.
2.இஞ்சி,பூண்டு,முந்திரியை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.
3.ஒரு பவுல் எடுத்து அதில் 5 தேக்கரண்டி தேங்காய் பால் ஊற்றி அதில் நறுக்கி வைத்துள்ள இஞ்சி,பூண்டு,முந்திரி,ஏலக்காய் மற்றும் உலர்ந்த திராட்சை சேர்த்து கடைசியாக 1 ஸ்பூன் பால் மற்றும் 1 ஸ்பூன் மஞ்சள் சேர்த்து நன்கு கலக்கி கொள்ள வேண்டும்.
4.அந்த பாலில் சேர்த்துள்ள பொருட்களை மென்று விழுங்கி விட்டு அவற்றை குடிக்க வேண்டும்.
இவ்வாறு தினமும் செய்து குடித்து வந்தோம் என்றால் வயிற்று உப்பசம் மற்றும் நெஞ்சு பகுதியில் குத்தும் உணர்வு சரியாகி விடும்.