வீட்டில் ஒரே பல்லி தொல்லையா இருக்கா? கவலையை விடுங்கள்.. இதை ட்ரை பண்ணுங்க!! 100% தீர்வு நிச்சயம்!!

0
38
#image_title

வீட்டில் ஒரே பல்லி தொல்லையா இருக்கா? கவலையை விடுங்கள்.. இதை ட்ரை பண்ணுங்க!! 100% தீர்வு நிச்சயம்!!

நம்மில் பலருக்கு பல்லி என்றால் அருவருப்பும்,பயமும் இருக்கும்.இந்த பல்லிகள் வீட்டில் இல்லாத இடமில்லை.அனைத்து இடங்களிலும் பதுங்கி கொண்டு நம்மை பாடாய் படுத்தி வருகிறது.சமையலறையில் பல்லிகள் நடமாட்டம் அதிகம் இருந்தால் நீங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.நம் வீடுகளில் பொருட்கள் அதிகம் நகர்த்தப்படாத இடங்களில் தான் பல்லி டேரா போட்டிருக்கும்.இந்த பல்லி தொல்லையில் இருந்து விடுபட ரசாயனம் கலந்த ஸ்ப்ரேயர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இதனை காட்டிலும் வீட்டில் உள்ள சில பொருட்களை பயன்படுத்தி பல்லி தொல்லையில் இருந்து நிரந்தரமாக சுதந்திரம் பெற்று விடலாம்.இந்த முறையினால் நமக்கு எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படாது.அதே சமயம் செலவும் இல்லை.

தேவையான பொருட்கள்:-

*காபி தூள் – 1 தேக்கரண்டி

*மிளகாய் தூள் – 1/4 தேக்கரண்டி

செய்முறை:-

ஒரு தட்டில் 1 தேக்கரண்டி காபித்தூள் கொட்டி கொள்ளவும்.பின்னர் அதில் தனி மிளகாய்த்துள் 1/4 தேக்கரண்டி சேர்க்கவும்.பின்னர் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அதை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து கொள்ளவும்.இதை பேப்பரில் வைத்து பல்லி நடமாட்டம் இருக்கும் இடங்களில் வைக்கவும்.இதை பல்லி உண்ட அடுத்த நிமிடமே இறந்து விடும்.அதோடு அனைத்து பல்லிகளும் உடனடியாக வெளியேறி விடும்.

மற்றொரு முறை:-

தேவையான பொருட்கள்:-

*பூண்டு – 6 பற்கள்

*பெரிய வெங்காயம் – பாதி அளவு

*எலுமிச்சை பழச்சாறு – 2 தேக்கரண்டி

*டெட்டால் – 2 தேக்கரண்டி

செய்முறை:-

முதலில் ஓரு பவுல் எடுத்து கொள்ளவும்.அதில் 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொள்ளவும்.பின்னர் டெட்டால் 2 தேக்கரண்டி அளவு எடுத்து அதில் சேர்க்கவும்.

பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் பெரிய வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து அரைத்து சாறு பிழிந்து எடுத்து கொள்ளவும்.

அந்த சாற்றை டெட்டால் கலந்து வைத்துள்ள தண்ணீரில் சேர்க்கவும்.பின்னர் அதில் எலுமிச்சை பழச்சாறு 2 தேக்கரண்டி சேர்த்து நன்கு கலக்கவும்.இந்த கலவையை ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி வீட்டில் பல்லிகள் நடமாட்டம் இருக்கும் பகுதிகளில் தெளிக்கவும்.இப்படி செய்தால் வீட்டில் பல்லி தொல்லை இருக்காது.