இவருடைய தலைமையிலான அணியே சிறந்தது?

Photo of author

By Parthipan K

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரருமான சுனில் கவாஸ்கர்  இந்திய அணியை பற்றி பேசும்போது  விராட் கோலி தலைமையிலான தற்போதைய அணியே இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த அணி என்று நம்புகிறேன். ஆனால் இன்று விராட் கோலிக்கு கிடைத்த பவுலர்கள் அப்போதைய இந்திய அணியில் இல்லை. பந்து வீச்சில் நிறைய வித்தியாசங்களை இந்திய அணி கொண்டிருக்கிறது.

அது தான் முக்கியமான அம்சம். எந்த ஆடுகளத்திலும் இவர்களால் 20 விக்கெட்டுகளை வீழ்த்த முடியும். 20 விக்கெட்டுகளை கைப்பற்ற முடியாவிட்டால் டெஸ்டில் வெற்றி காண முடியாது. ஆனால் அப்போதைய சூழல், எனது திறமை மீது இருந்த நம்பிக்கையின்மை காரணமாக அந்த மாதிரி வேகமாக ஆட முடியாமல் போய் விட்டது. ஆனால் அடுத்த தலைமுறை வீரர்கள் இதை செய்யும் போது பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கவாஸ்கர் கூறினார்.