இத்தனை பில்லியன் செலவில் கட்டப்பட்ட சுரங்கப்பாதையா?

0
144

சுவிட்ஸர்லந்து அதன் Ceneri Base சுரங்க ரயில் பாதையை அதிகாரபூர்வமாக நேற்று திறந்து வைத்தது. அதனைக் கட்டிமுடிக்க சுமார் 10 ஆண்டுகள் எடுத்தன; 25 பில்லியன் டாலர் செலவானது. செங்குத்தான உயரம் அதிகம் கொண்ட பாதைக்குப் பதிலாக அந்தச் சுரங்கப் பாதை அமைக்கப்பட்டது. புதிய சுரங்கப் பாதை, ரோட்டர்டாமிலிருந்து (Rotterdam) ஜினோவாவரை (Genoa) மலைகளின் அடியில் சுமார் 1,400 கிலோமீட்டருக்குத் தடையின்றி பயணம் மேற்கொள்ள வகைசெய்யும்.

சுரங்கப் பாதையைப் பயன்படுத்துவதன் மூலம் வாகனப் பயணங்களைக் குறைக்கலாம் – அதன் மூலம் கரியமில வாயு வெளியேற்றத்தையும் குறைக்க முடியும். அதோடு, பயண நேரத்தையும் மிச்சப்படுத்தலாம் எனக் குறிப்பிடப்பட்டது. ஆல்ப்ஸ் மலையை ஆண்டுக்குச் சுமார் 650,000 கனரக வாகனங்கள் கடந்து செல்கின்றன. அவற்றின் மூலம் 890 டன் கரியமில வாயு வெளியேறுகிறது.

Previous articleகல்லூரி இறுதிப் பருவத்தேர்வு வருகின்ற செப்டம்பர் 21-ஆம் தேதி தொடங்கும்:! பல்கலைக்கழகம் அறிவிப்பு!
Next articleமுடக்கநிலையை எதிர்த்துப் போராடும் மக்கள்