நாளுக்கு நாள் வெள்ளை நரை அதிகரித்துக் கொண்டே செல்கிறதா? அப்போ இது ஒன்று தான் பெஸ்ட் தீர்வு!

0
183
#image_title

நாளுக்கு நாள் வெள்ளை நரை அதிகரித்துக் கொண்டே செல்கிறதா? அப்போ இது ஒன்று தான் பெஸ்ட் தீர்வு!

இன்றைய மோசமான வாழ்க்கை முறையால் சிறு குழந்தைகளுக்கு கூட எளிதில் இளநரை பாதிப்பு ஏற்படுகிறது. வைட்டமின் குறைபாடு, ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பல காரணங்களால் ஏற்படும் இளநரை பாதிப்பை சில தினங்களில் சரி செய்ய விருப்பப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை முறையை பின்பற்றி வரவும்.

தேவையான பொருட்கள்:

*பெரிய நெல்லிக்காய்
*சின்ன வெங்காயம்
*வெந்தயம்
*தேங்காய் எண்ணெய்
*கறிவேப்பிலை
*மருதாணி
*எலுமிச்சை சாறு

செய்முறை:

ஒரு கப் நெல்லிக்காயை விதை நீக்கி காயவிட்டு எடுத்துக் கொள்ளவும். அதேபோல் ஒரு கைப்படி மருதாணி மற்றும் கறிவேப்பிலையை நிழலில் உலர்த்தி கொள்ளவும்.

பிறகு ஒரு கப் சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி மைய்ய அரைத்து வடை போல் தட்டி வெயிலில் காயவிட்டு எடுத்துக் கொள்ளவும்.

அதன் பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1/4 கப் வெந்தயம் போட்டு மிதமான தீயில் வறுத்து அரைத்துக் கொள்ளவும்.

அதேபோல் காயவைத்த கறிவேப்பிலை, மருதாணி, சின்ன வெங்காயம் மற்றும் நெல்லிக்காயை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பவுடராக்கி கொள்ளவும்.

முதலில்’அரைத்த வெந்தயப் பொடி மற்றும் இரண்டாவதாக அரைத்த பொடி இரண்டையும் கலந்து ஒரு டப்பாவில் போட்டுக் கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 250 மில்லி தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். பிறகு அரைத்த பொடி 5 தேக்கரண்டி அளவு போட்டு கலந்து கொள்ளவும்.

எண்ணெயில் சேர்த்த பொருட்கள் அனைத்தும் பேஸ்ட் பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்து ஆறவிடவும்.

அதன் பின்னர் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும். இந்த பேஸ்டை தலை முடிகளின் வேர்க்காள் பகுதியில் படும்படி தடவி ஒரு மணி நேரத்திற்கு ஊற விட்டு பின்னர் தலைக்கு குளிக்கவும். ஒரு முறை இந்த பேஸ்ட் தயாரித்தால் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இந்த ஹேர் பேக் எந்த ஒரு பக்க விளைவுகளும் இன்றி தலையில் உள்ள வெள்ளை முடிகளை கருமையாக்க உதவுகிறது.

Previous articleஅம்மை நோயினால் ஏற்பட்ட தழும்புகள் மறைய வேண்டுமா? இந்த பொருட்களை இப்படி பயன்படுத்துங்க!
Next articleமேனிக்கு “தாமரை விதை + தேன்” பயன்படுத்தினால் 20 வயதை குறைத்து காட்டும்!