கழுத்தை சுற்றி கருமை நிறம் இருக்கின்றதா!!! இதை மறைய வைக்க சில எளிமையான வைத்தியக் குறிப்புகள் இதோ!!!

0
36

கழுத்தை சுற்றி கருமை நிறம் இருக்கின்றதா!!! இதை மறைய வைக்க சில எளிமையான வைத்தியக் குறிப்புகள் இதோ!!!

கழுத்தை சுற்றி இருக்கும் கருமை நிறத்தை மறைய வைக்க இந்த பதிவில் சில எளிமையான வீட்டு மருத்துவ முறைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

கழுத்தை சுற்றி உள்ள இந்த கருமை நிறம் உடல் வெப்பம், ஒவ்வாமை, வியர்வை போன்ற காரணங்களால் ஏற்படுகின்றது. மேலும் உடல் எடை அதிகமாக இருக்கும் நபர்களுக்கும் இந்த கழுத்துக் கருமை ஏற்படுகின்றது.

இதை மறைய வைக்க பல சிகிச்சை முறைகளை எடுத்திருப்போம். இந்த பதிவில் இந்த கருமையை நீக்க சில எளிமையான வீட்டு வைத்திய முறைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.

கழுத்தை சுற்றி உள்ள கருமையை போக்கும் வழிமுறைகள்…

* இரண்டு ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அத்துடன் நான்கு ஸ்பூன் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின்னர் பஞ்சை எடுத்து இதில் தொட்டு கழுத்தை சுற்றி தேய்த்து வந்தால் கழுத்தை சுற்றி உள்ள கருமை நீங்கும்.

* சிறிதளவு பேக்கிங் சோடா எடுத்து அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல தயார் செய்து கொள்ள வேண்டும். பின்னர் இதை கழுத்தை சுற்றி பேக் போல தேய்த்து 15 நிமிடங்கள் கழிந்து கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் கழுத்தை சுற்றி உள்ள கருமை நீங்கும்.

* உருளைக் கிழங்கை எடுத்து அரைத்து அதில் இருந்து சாறு எடுத்து அந்த சாற்றை கழுத்தை சுற்றி தேய்த்து வந்தால் கழுத்து கருமை நீங்கும்.

* இரண்டு டேபிள் ஸ்பூன் கடலை மாவு, அரை டேபிள் ஸ்பூன் மஞ்சள் பொடி, அரை டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, சிறிதளவு ரோஸ் வாட்டர் எடுத்துக் கொள்ளவும். அனைத்தையும் ஒரு பவுலில் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பேஸ்ட் போல தயார் செய்து இதை கழுத்தை சுற்றி தேய்த்து 15 நிமிடங்கள் கழிந்து கழுவின்ல் கழுத்து கருமை மறைந்து விடும்.

* தயிர் சிறிதளவு எடுத்து அதில் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து அதை கழுத்தை சுற்றி தேய்க்க வேண்டும். இதனால் கழுத்து கருமை மறையத் தொடங்கும்.