செம்பருத்தி பூ இருக்கா? அப்போ முடி அடர்த்தி அதிகரிக்கும் ஹேர் ஆயில் ரெடி!

Photo of author

By Divya

செம்பருத்தி பூ இருக்கா? அப்போ முடி அடர்த்தி அதிகரிக்கும் ஹேர் ஆயில் ரெடி!

ஆண்களோ, பெண்களோ தங்களின் முடி அடர்த்தியாக இருக்க வேண்டும் ஆசைக் கொள்வார்கள். சிலருக்கு ஊட்டச்சத்து குறைபாடு, வேலைப்பளு, மன அழுத்தம் உள்ளிட்ட பல காரணங்களால் முடி உதிர்தல் அதிகளவில் ஏற்படுகிறது.

இதை கண்ட்ரோல் செய்ய கெமிக்கல் ஹேர் ஆயில், ஷாம்பு வாங்கி தலைக்கு உபயோகிப்பதனால் எந்த ஒரு பயனும் கிடைக்காது. மாறாக முடி உதிர்தல் தான் அதிகம் ஏற்படும். எனவே முடி உதிர்வை சரி செய்ய வீட்டு முறையில் தயாரிக்கப்பட்ட எண்ணையை பயன்படுத்துவது நல்லது.

1)செம்பருத்தி பூ
2)தேங்காய் எண்ணெய்

செய்முறை:-

ஒரு கப் அளவு செம்பருத்தி பூ இதழ் எடுத்துக் கொள்ளவும். இதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும்.

அதன் பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து தேங்காய் எண்ணெய் 1/2 லிட்டர் ஊற்றி சூடுபடுத்திக் கொள்ளவும்.

எண்ணெய் சூடானதும் செம்பருத்தி பேஸ்டை அதில் சேர்த்து கொதிக்க விடவும். 5 நிமிடங்களுக்கு கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

இந்த எண்ணெயை நன்கு ஆறவிட்டு ஒரு பாட்டிலில் ஊற்றி சேமித்துக் கொள்ளவும். தலை முடிகளுக்கு இந்த எண்ணையை உபயோகித்து வந்தால் முடி உதிர்தல் நின்று அடர்த்தியாக முடி வளரும்.