அசிடிட்டி பிரச்சனை இருக்கின்றதா!!? அதை சரிசெய்யும் கொத்தமல்லி தண்ணீர்!!!

Photo of author

By Sakthi

அசிடிட்டி பிரச்சனை இருக்கின்றதா!!? அதை சரிசெய்யும் கொத்தமல்லி தண்ணீர்!!!
அசிடிட்டி பிரச்சனையை சரி செய்வதற்கு கொத்தமல்லி விதைகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். மேலும் கொத்தமல்லி தண்ணீரின் மற்ற பயன்கள் என்ன என்பதை பற்றி பார்க்கலாம்.
அசிடிட்டி என்பது நெஞ்செரிச்சல் அதாவது நெஞ்சு எரியும் தன்மையை ஏற்படுத்தும் ஒரு உணர்வு ஆகும். இந்த அசிடிட்டி பிரச்சனை அதிகமாக எண்ணெய் உணவுகளை எடுத்துக் கொள்வதாலும் ஏற்படும். அசிடிட்டி பிரச்சனையை சரி செய்ய நாம் கொத்தமல்லி தண்ணீரை பயன்படுத்தலாம்.
அதற்கு கொத்தமல்லியை முதல் நாள் இரவு தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பின்னர் மறுநாள் காலையில் எழுந்தவுடன். வெறும் வயிற்றில் இதை குடிக்க வேண்டும். இதனால் அசிடிட்டி பிரச்சனை குணமாகும். மேலும் கொத்தமல்லி தண்ணீரை குடிக்கும் பொழுது கிடைக்கும் மற்ற நன்மைகள் என்ன என்பதை பற்றி பார்க்கலாம்.
கொத்தமல்லி தண்ணீரை பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்…
* கொத்தமல்லி தண்ணீரை குடித்து வந்தால் செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் சரியாகி விடும்.
* கொத்தமல்லி தண்ணீரை குடித்து வரும் பொழுது உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்.
* கொத்தமல்லி தண்ணீரை குடித்து வந்தால் வயிற்றை குளிர்ச்சியாக வைத்திருக்கும்.
* கொத்தமல்லி விதைகள் மற்றும் இலைகளில் நார்ச்சத்துக்கள் அதிகளவில் இருக்கின்றது. இதனால் நமக்கு நீண்ட நேரம் வயிறு நிரம்பி இருக்கும் உணர்வை கொடுக்கின்றது.
* கொத்தமல்லி தண்ணீரை குடிப்பது சருமத்திற்கு ஆரோக்கியத்தை அளிக்கின்றது. மேலும் சருமத்தை பாதுகாப்பதில் இருந்து பாதுகாக்கின்றது.
* கொத்தமல்லி தண்ணீரை குடித்து வரும்பொழுது நம் முகத்தில் ஏற்படும் முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளை மறைய செய்யலாம்.
* சர்க்கரை நோய் உள்ளவர்கள் அனைவரும் தொடர்ந்து இந்த கொத்தமல்லி தண்ணீரை குடித்து வரலாம்.