இன்றைய காலகட்டத்தில் விந்தணு குறைபாடு ஆண்களுக்கு பொதுவான பாதிப்பாக மாறி வருகிறது.ஆண்கள் தங்கள் விந்தணு தரத்தை அதிகரிக்க சித்த வைத்தியத்தை பின்பற்றலாம்.நீர்த்த விந்து,குறைவான விந்து பிரச்சனை இருக்கும் ஆண்களுக்கு வரப் பிரசாதமாகும்.
தேவைப்படும் பொருட்கள்:-
1)பசும் பால் – ஒரு கிளாஸ்
2)தேன் – ஒரு தேக்கரண்டி
3)ஓரிதழ் தாமரை பொடி
செய்முறை விளக்கம்:-
அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பசும் பால் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பால் பச்சை வாடை நீங்கும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
பிறகு இந்த பாலை கிளாஸ் ஒன்றிற்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி அளவிற்கு ஓரிதழ் தாமரை பொடி போட்டு கலந்து கொள்ள வேண்டும்.அடுத்து இந்த இந்த பாலில் ஒரு தேக்கரண்டி தேன் ஊற்றி பருகி வந்தால் விந்தணு உற்பத்தி அதிகரிக்கும்.
தேவைப்படும் பொருட்கள்:-
1)பசும் பால் – ஒரு கிளாஸ்
2)பூனைக்காலி விதை பொடி – 10 கிராம்
2)தேன் – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
பசும் பாலை பாத்திரம் ஒன்றில் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி பூனைக்காலி விதை பொடி போட்டு காய்ச்சி கிளாஸிற்கு வடிகட்டி கொள்ள வேண்டும்.
அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி அளவு தேன் ஊற்றி பருகினால் விந்தணு உற்பத்தி அதிகரிக்கும்.
தேவைப்படும் பொருட்கள்:-
1)பால் – ஒரு கிளாஸ்
2)செவ்வாழைப்பழம் – ஒன்று
3)தேன் – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு செவ்வாழைப்பழத்தை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.
பின்னர் இதை காய்ச்சிய பாலில் போட்டு ஒரு தேக்கரண்டி தேன் மிக்ஸ் செய்து குடித்து வந்தால் விந்தணு உற்பத்தி அதிகரிக்கும்.