கொரோனாவை தடுக்க சீனாவில் இப்படி ஒரு வைத்தியமா?

Photo of author

By Parthipan K

சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித இனத்துக்கே பெரிய ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று நோயை தடுப்பதற்காக முதன் முதலாக மூக்கு வழியாக ‘ஸ்பிரே’ செய்யக்கூடிய தடுப்பூசி மருந்து உருவாக்கப்பட்டுள்ளது. ஹாங்காங் பல்கலைக்கழகம், ஜியாமென் பல்கலைக்கழகம், பீஜிங் வாண்டாய் உயிரியல் மருந்தகம் ஆகியவற்றின் கூட்டு தயாரிப்பு இது.

இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் முதல் கட்ட மருத்துவ பரிசோதனைக்கு சீன தேசிய மருத்துவ தயாரிப்புகள் கழகம் தனது ஒப்புதலை அளித்துள்ளது. மேலும் இந்த மருத்துவ சோதனை நவம்பர் மாதம் தொடங்கும் எனவும் இதில் 100 பேருக்கு மூக்கு வழியாக ‘ஸ்பிரே’ செய்து அதன் விளைவுகள் ஆராயப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.