கார் மீது சாய்ந்து நின்ற சிறுவனுக்கு இப்படி ஒரு தண்டனையா? காரின் உரிமையாளர் செய்த கொடூர செயல்
என்னதான் அடிப்படை உரிமை, கடமை என்று பேசிக்கொண்டு இருந்தாலும் அதனை மீறும் வகையில் சில வன்மையான கண்டிக்கத்தக்க செயல்கள் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது அந்த வகையில் தற்போது 6 வயது சிறுவனுக்கு நடந்துள்ள கொடுமை அணைவரின் இதயத்தையும் கலங்கவைத்துள்ளது .
ராஜஸ்தானை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர் மகன்தான் இந்த 6 வயது சிறுவன், கேரளா மாநிலத்தில் வசித்து வருகின்றான், இந்த நிலையில் சிறுவன் தந்தையுடன் கடைவீதிக்கு சென்று உள்ளான். அப்போது சாலையில் அருகே நின்ற கார் மீது சாய்ந்து கொண்டு நின்றிருந்துள்ளான்.
இந்நிலையில் கடையில் இருந்து வெளியே வந்த கார் உரிமையாளர் சிறுவன் தனது கார் மீது சாய்ந்து இருப்பதை கண்டு கடும் கோபம் அடைந்து தகாத வார்த்தைகளால் திட்டி தீர்த்தது மட்டும் இன்றி சிறுவனை அடித்து துன்புறுத்தியுள்ளார்.
இதை பார்த்த பொது மக்கள் சிலர் அவரிடம் சண்டை போட்டு இருக்கின்றனர். இருந்தும் அவர்கள் பேசியதை சற்றும் பொருட்படுத்தாது அந்த இடத்தில் இருந்து சென்றார். இதனை பார்த்த சமூக ஆர்வாளர்கள் காவல் துறையில் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் காவல்துறை விசாரனையில் அவர் பொண்ணியம்பாலம் பகுதியை சேர்ந்த முகமது ஷின்ஷாத் என்பது தெரிய வந்தது. இந்த நிலையில் இவரை
கைது செய்து இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. காவல்துறை அதிகாரிகள் அவரது கார் எண்ணை கொண்டு குற்றவாளியை கண்டுபிடித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.