லசித் மலிங்காவிற்கு பதில் ஆஸ்திரேலியாவின் இந்த வீரரா?

Photo of author

By Parthipan K

கிரிக்கெட்டில் யார்க்கர் என்ற பந்தை கேட்டாலே நம் அனைவரின் நினைவுக்கு வருவது இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்காதான். இவர் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். மும்பை அணி வெற்றியில் இவரது பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். இந்த சீசனில் லிசித் மலிங்கா இடம் பெறமாட்டார் என்று மும்பை இந்தியன்ஸ் அணி அறிவித்துள்ளது. மேலும், அவருக்குப் பதிலாக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பேட்டின்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று மும்பை இந்தியன்ஸ் அணி தெரிவித்துள்ளது.