கெவின் பீட்டர்சனின் சிறந்த வெர்சனா இந்த வீரர்?

Photo of author

By Parthipan K

இங்கிலாந்து அணியின் இளம் அதிரடி பேட்ஸ்மேன் டாம் பாண்டன் குறித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை ஆலோசகர் டேவிட் ஹசி கூறுகையில் ‘‘டாம் பாண்டனை ஒப்பந்தம் செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இதுவரை வெளிநாட்டு வீரர்கள் அணியில் வந்து இணையவில்லை. டாம் பாண்டன் நேரடி ஆட்டத்தை காண உற்சாகமாக இருக்கிறோம். பிக் பாஷில் அவரது ஆட்டம் தனித்துவமானதாக இருந்தது. அனுபவ வீரர்களான தினேஷ் கார்த்திக், குல்தீப் யாதவ், சுனில் நரைன், ஆந்த்ரே ரஸல் ஆட்டங்களும் சிறப்பாக இருக்கும். அவர்கள் இளைஞர்களுக்கு உதவி செய்து வழிநடத்தி செல்வார்கள். 21 வயதான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் டாம் பாண்டன் புதிய வெர்சன் அல்லது கெவின் பீட்டர்சனின் சிறந்த வெர்சன்.