விளையாட்டுத்தனமாக செய்யும் காரியமா இது? உயிரை காவு வாங்கிய குடிப்பழக்கம்!
ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி அடுத்த பொன்னம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (63). இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி ஜெயலட்சுமி (52). பாச்சமல்லனூர் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் மருத்துவ சிகிச்சைக்காக வேலூர் சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அவரது கணவர் பழனிசாமி செல்போனில் தொடர்பு கொண்டு உள்ளார்.
அவர் தான் குடிபோதையில் பூச்சி மருந்து குடித்து விட்டதாகவும் தற்போது உயிரிழக்க போவதாகவும் கூறி செல்போன் இணைப்பை துண்டித்துள்ளார். இதனைக் கேட்டு ஜெயலட்சுமி அதிர்ச்சி அடைந்து விரைந்து வீட்டிற்குச் சென்று பார்த்துள்ளார் அப்போது பழனிசாமி குடிபோதையில் வாந்தி எடுத்துக் கொண்டிருந்தார்.
அதனையடுத்து அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்களின் உதவியுடன் பழனிசாமியை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அன்னூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பழனிசாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து புளியம்பட்டி போலீசார்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.