கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய விளைவை ஏற்படுத்தி வருகிறது. உலக மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. மக்கள் ஒருபக்கம் பாதிக்கப்பட மறுபக்கம் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் வீழ்ச்சி அடைந்தது. நிறுவனங்களுக்க மட்டுமல்ல. கிரிக்கெட் போர்டுகளுக்கும் நிதி நெருக்கடி ஏற்பட்டது.
ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் போர்டு தொற்று ஆரம்பித்த காலகட்டத்திலலே சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட பல கடைகளில் வேலை வாங்கி கொடுத்தது. ஆனால் பிசிசிஐ மட்டும் சம்பளம் குறைப்பு, ஆட்கள் குறைப்பு எதையும் செய்யவில்லை. சரியான நேரத்தில் வீரர்களுக்கான சம்பளத்தொகையை செலுத்தியது. இந்த நிலை தொடர்ந்தால் சம்பளம் பிடித்தம், ஆட்கள் குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வாய்ப்பு உள்ளதாக ஐஏஎன்எஸ் அதிகாரி தெரிவித்தார்.