டிரம்ப்பையே எதிர்க்கும் இந்த நிறுவனம்?

Photo of author

By Parthipan K

டிரம்ப்பையே எதிர்க்கும் இந்த நிறுவனம்?

Parthipan K

இந்திய – சீன லடாக் எல்லை பிரச்சினையில் சீன செயலியான டிக் டாக் நிறுவனத்தை தடை இந்தியா செய்தது. அதேபோன்று அமெரிக்காவிலும் இந்த செயலியை தடை செய்ய டிரம்ப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் வீசாட் போன்ற செயலிகளை தடை செய்ய உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்பும் அறிவித்தார். இந்த நிலையில் டிக் டாக் நிர்வாகம் டிரம்பின் இந்த உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தை நாட உள்ளது. இது குறித்து அதன் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‘‘டிரம்பின் நிர்வாகத்தை ஏறக்குறைய ஓராண்டாக தொடர்புகொள்ள முயற்சித்து தோற்றுப்போனோம்.
உண்மை குறித்து அவர்கள் கவனம் செலுத்தவில்லை. சட்டத்தின் ஆட்சி நிராகரிக்கப்படவில்லை என்பதையும், எங்கள் நிறுவனம் மற்றும் பயனர்கள் நியாயமான முறையில் நடத்தப்படுவதையும் உறுதி செய்வதற்காக நீதித்துறையை நாடுவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. இதனால் மைக்ரோசாப்ட் மற்றும் ஆரக்கிள் உடன் விற்பனை தொடர்பான பேச்சுவார்த்தை பாதிக்கப்படாது’’ என்றார்.