சேலம் மாவட்டத்தில் அரங்கேரிய கொலை காரணம் இதுதானா! தம்பதிக்கு ஆயுள் தண்டனை!
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கருப்பனார் கோவில் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மாரப்பன் (63). அவரது மனைவி சரோஜா (60). மேலும் அதே பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (70). இவர்கள் இருவரும் விவசாய நிலம் வைத்து விவசாயம் செய்து வருகின்றார்கள். இவர்களுக்கு நிலம் சம்பந்தமாக அவ்வப்போது தகராறு இருந்து வந்தது.
மேலும் இந்நிலையில் நிலம் சம்பந்தமாக சென்னை கோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது. மேலும் கோர்ட்டின் உத்தரவுபடி மாரப்பன் விவசாயம் செய்த நாலரை ஏக்கர் நிலத்தை அரசு எடுத்துக் கொண்டது. இதனால் கந்தசாமியின் மீது மாரப்பனும் அவருடைய மனைவிக்கும் கோபம் ஏற்பட்டது. அதே கோபத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16ஆம் தேதி கந்தசாமி அவரது தோட்டத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார்.
மேலும் அந்த தோட்டத்திற்கு சென்ற மாரப்பன் மற்றும் அவருடைய மனைவி சரோஜா ஆகியோர் கந்தசாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்த வாக்குவதம்மானது முற்றிய நிலையில் மாரப்பன் மற்றும் அவரது மனைவி சரோஜா இருவரும் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கந்தசாமியை வெட்டி கொலை செய்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து கெங்கவல்லி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கெங்கவல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து மாரப்பன் மற்றும் அவருடைய மனைவி சரோஜா இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கானது நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு சேலம் மாவட்டம் முதலாவது கூடுதல் அமர்வு கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையில் மாரப்பன் மற்றும் அவரது மனைவி சரோஜாவிற்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் நீதிபதி ஜெகநாதன் தலா ரூ 5 ஆயிரம் அபராதமாக வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார்.