நீங்கள் பிறந்த தமிழ் மாதம் இதுவா..? அப்போ உங்கள் குணம் இதுதான்..!!

Photo of author

By Divya

நீங்கள் பிறந்த தமிழ் மாதம் இதுவா..? அப்போ உங்கள் குணம் இதுதான்..!!

1)சித்திரை

இந்த மாதத்தில் பிறந்தவர்கள் காரியம் சாதிப்பதில் வல்லவர்கள். தங்களின் இலட்சியத்தை மனதில் கொண்டு அதை நிறைவேற்ற வேண்டும் என்பதில் முழு மூச்சுடன் இருப்பார்கள்.

2)வைகாசி

இந்த மாதத்தில் பிறந்தவர்கள் எதையும் அவ்வளவு எளிதில் மறந்து விடமாட்டார்கள். இவர்களுக்கு சோம்பல் குணம் அதிகம் இருக்கும். இவர்களுக்கு பெரிதாக கோபம் வராது. ஒருவேளை கோபம் வந்தால் ‘சாது மிரண்டால் காடு கொள்ளாது’ என்பது போல் தான் இருப்பார்கள்.

3)ஆனி

இந்த மாதத்தில் பிறந்தவர்கள் மிகுந்த புத்திசாலிகளாக இருப்பார்கள். இவர்களுக்கு மற்றவர்களை அடக்கி ஆளும் பலம் உள்ளது. இவர்கள் மற்றவர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டுமென்று நினைப்பார்கள்.

4)ஆடி

இந்த மாதத்தில் பிறந்தவர்கள் கற்பனை உலகில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். தங்களின் எதிர்காலத்தை திட்டமிடுவதில் சிறந்தவர்களாக இருப்பார்கள்.

5)ஆவணி

இந்த மாதத்தில் பிறந்தவர்கள் சுதந்திரமாக வாழ ஆசைக் கொள்வார்கள். பெருந்தன்மையான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். எந்த ஒரு காரியத்தையும் உடனடியாக செய்து முடிக்க நினைப்பார்கள். இவர்களிடம் இயற்கையாகவே பிடிவாத குணம் இருக்கும்.

6)புரட்டாசி

இந்த மாதத்தில் பிறந்தவர்கள் பெரும் செல்வத்துடன் வாழ பிறந்தவர்கள். கல்வியிலும் இவர்கள் சிறந்து விளங்குவார்கள். யாராவது தவறு செய்தால் தட்டிக் கேட்கும் குணம் இவர்களிடம் உண்டு. இவர்கள் சந்தேக மனப்பான்மை மிக்கவர்களாக இருப்பார்கள்.

7)ஐப்பசி

இந்த மாதத்தில் பிறந்த ஆண்களும், பெண்களும் எந்த காரியத்திலும் வல்லவர்களாக இருப்பார்கள். இவர்களை பொறுத்தவரை வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பொருட்களையும் சேர்த்துக் கொள்வதில் ஆர்வம் இருக்கும்.

8)கார்த்திகை

இந்த மாதத்தில் பிறந்தவர்கள் பயந்த சுபாவம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் வாழ்க்கையில் கிடைத்த அனுபவத்தை கொண்டு எதிர்கலத்தை வகுத்துக் கொள்ளும் வல்லமை உடையவர்கள். இவர்கள் குழந்தையைப் போல் மற்றவர்களிடம் பழகுவார்கள்.

9)மார்கழி

இந்த மாதத்தில் பிறந்தவர்கள் எந்த விஷயத்திலும் தனித்தன்மையுடன் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இவர்கள் ஒரு காரியத்தை தொடங்கினால் முடிக்காமல் தூங்க மாட்டார்கள்.

10)தை

இந்த மாதத்தில் பிறந்தவர்கள் கஞ்சத்தனம் உடையவர்களாக இருப்பார்கள். இவர்கள் கடமையில் கெட்டிக்காரர்கள். இவர்களுக்கு விவசாயம் மற்றும் மனைகள் வாங்கி விற்பது ஏற்ற தொழிலாக இருக்கும்.

11)மாசி

இந்த மாதத்தில் பிறந்த நபர்கள் முன்கோபக்காரர்களாக இருப்பார்கள். இவர்களிடம் யாராவது உண்மையை மறைத்தால் அதை அறிந்துகொள்ளும் வல்லமை உடையவர்கள். தொழில் அதிக அக்கறை காட்டும் குணம் இவர்களிடம் உண்டு.

12)பங்குனி

இந்த மாதத்தில் பிறந்த நபர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியவர்கள். இவர்களுக்கு முன்கோபம் அதிகம் வரும். இவர்கள் சுற்றிவளைத்து பேசும் குணம் கொண்டவர்கள்.