இப்படியெல்லாமா திமுகவினர் செய்ராங்க!!? லியோ ஆடியோ லாஞ்ச் குறித்து டிடிவி தினகரன் பேச்சு!!!
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தின் ஆடியோ லாஞ்ச் ரத்து செய்யப்பட்டதை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அமமுக கட்சியின் பொதுச் செயலர் டிடிவி தினகரன் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் உருவாகி உள்ளது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் அவர்கள் இசை அமைத்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பாக லலித் குமார் அவர்கள் தயாரித்துள்ளார்.
லியோ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி உலக அளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மேலும் லியோ திரைப்படத்தின் டிரெய்லர் வரும் அக்டோபர் 5ம் தேதி வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.
இந்நிலையில் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 30 நடைபெறும் என்று தகவல்கள் பரவி வந்தது. மேலும் அதற்கான வேலைகளும் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருவதாக தகவல்கள் பரவி வந்தது. ஆனால் செப்டம்பர் 29ம் தேதி இரவு லியோ திரைப்படத்தின் தயாரிப்பாளரான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் எக்ஸ் பக்கத்தில் “லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு அதிக டிக்கெட்டுகள் வேண்டும் என்று கோரிக்கை வந்ததன் காரணமாகவும் ரசிகர்களின் பாதுகாப்பு கருதியும் ரத்து செய்யப்படுகிறது” என்று அறிவித்தது.
மேலும் இதற்கு பின்னணியில் எந்தவித அரசியல் அழுத்தமும் இல்லை என்றும் தெரிவித்திருந்தது. இந்த சம்பவம் தமிழ் சினிமா துறையிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து ரசிகர்கள் பலரும் சாகாமல் மீடியா வாயிலாக தங்கள் ஆதங்கத்தை தெரிவித்து வந்தனர்.
லியோ ஆடியோ லாஞ்ச் ரத்து செய்யப்பட்டதற்கு நடிகர் விஜய் அவர்களுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர்கள் கருத்து தெரிவித்திருந்தார். அந்த வகையில் அமமுக கட்சியின் பொது செயலர் டிடிவி தினகரன் அவர்களும் லியோ ஆடியோ லாஞ்ச் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் டிடிவி தினகரன் அவர்களிடம் “லியோ ஆடியோ லாஞ்ச் ரத்து செய்யப்பட்டதற்கு ஆளுங்கட்சிதான் காரணம் என்று சொல்லப்படுகிறதே அதற்கு உங்கள் கருத்து என்ன?’ என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த டிடிவி தினகரன் அவர்கள் “திமுகவினர் இப்படி எல்லாமா செய்கிறார்கள். திரைப்படத்துறை பற்றியும் அதன் பிரச்சனை பற்றியும் எனக்கு முழுமையாக தெரியவில்லை” என்று கூறினார். மேலும் நடிகர் விஜய் அவர்களின் அரசியல் வருகை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு டிடிவி தினகரன் அவர்கள் “இந்த ஜனநாயக நாட்டில் நடிகர் விஜய் மட்டுமல்ல. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்” என்று கூறினார்.