கோலிவுட்டின் வசூல் வேட்டையர் விஜய்யா? இல்ல ரஜினியா?

0
110
#image_title

கோலிவுட்டின் வசூல் வேட்டையர் விஜய்யா? இல்ல ரஜினியா?

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கும் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி மற்றும் ‘தளபதி’ விஜய் நடித்த கடைசி 10 படங்கள் மற்றும் வசூல் குறித்த விவரங்கள்.இன்றைய தமிழ் திரையுலகில் யார் வசூல் சக்கரவர்த்தி என்பது குறித்த விவரங்கள் இதோ.

1.வாரிசு மற்றும் ஜெயிலர்

இந்த ஆண்டு 2023ல் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வம்சி பைடிபைலி இயக்கத்தில் விஜய்,ராஷ்மிகா மந்தனா,யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘வாரிசு’.இப்படத்தின் பட்ஜெட் ரூ.200 கோடி என்று சொல்லப்படும் நிலையில் படம் வெளியாகி ரூ.310 கோடி வரை வசூல் செய்தது.கிட்டத்தட்ட ரூ.110 கோடி வரை லாபம் பார்த்தது.

கடந்த ஆகஸ்ட் 10 அன்று நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி,ரம்யா கிருஷ்ணன்,வசந்த் ரவி,தமன்னா,விநாயகம் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘ஜெயிலர்’.இப்படத்தின் பட்ஜெட் ரூ.200 கோடி என்று சொல்லப்படும் நிலையில் படம் வெளியாகி ரூ.625 கோடி வரை வசூல் செய்தது.கிட்டத்தட்ட ரூ.425 கோடி வரை லாபம் பார்த்தது.

இந்த இரண்டு படங்களையும் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது ஜெயிலர் 315 கோடி அதிகமாக வசூல் செய்துள்ளது.

2.பீஸ்ட் மற்றும் அண்ணாத்த

கடந்த 2022ல் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய்,பூஜா ஹெக்டே,யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘பீஸ்ட்’.இப்படத்தின் பட்ஜெட் ரூ.150 கோடி என்று சொல்லப்படும் நிலையில் படம் வெளியாகி ரூ.300 கோடி வரை வசூல் செய்தது.கிட்டத்தட்ட ரூ.150 கோடி வரை லாபம் பார்த்தது.

கடந்த 2022ல் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி,கீர்த்தி சுரேஷ்,நயன்தார,மீனா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘அண்ணாத்த’.இப்படத்தின் பட்ஜெட் ரூ.180 கோடி என்று சொல்லப்படும் நிலையில் படம் வெளியாகி ரூ.286 கோடி வரை வசூல் செய்தது.கிட்டத்தட்ட ரூ.106 கோடி வரை லாபம் பார்த்தது.

இந்த இரண்டு படங்களையும் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது பீஸ்ட்,அண்ணாத்த படத்தை விட அதிகமாக வசூல் செய்துள்ளது.

3.மாஸ்டர் மற்றும் தர்பார்

கடந்த 2021ல் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்,மாளவிகா மோகனன்,விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மாஸ்டர்’.இப்படத்தின் பட்ஜெட் ரூ.135 கோடி என்று சொல்லப்படும் நிலையில் படம் வெளியாகி ரூ.300 கோடி வரை வசூல் செய்தது.கிட்டத்தட்ட ரூ.165 கோடி வரை லாபம் பார்த்தது.

கடந்த 2020ல் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி,நயன்தாரா,யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘தர்பார்’.இப்படத்தின் பட்ஜெட் ரூ.200 கோடி என்று சொல்லப்படும் நிலையில் படம் வெளியாகி ரூ.250 கோடி வரை வசூல் செய்தது.கிட்டத்தட்ட ரூ.50 கோடி வரை லாபம் பார்த்தது.

இந்த இரண்டு படங்களையும் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது மாஸ்டர்,தர்பார் படத்தை விட அதிகமாக வசூல் செய்துள்ளது.

4.பிகில் மற்றும் பேட்ட

கடந்த 2019ல் இயக்குநர் அட்லீ இயக்கத்தில் விஜய்,நயன்தாரா,விவேக் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘பிகில்’.இப்படத்தின் பட்ஜெட் ரூ.180 கோடி என்று சொல்லப்படும் நிலையில் படம் வெளியாகி ரூ.300 கோடி வரை வசூல் செய்தது.கிட்டத்தட்ட ரூ.120 கோடி வரை லாபம் பார்த்தது.

கடந்த 2020ல் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி,விஜய் சேதுபதி,த்ரிஷா,சிம்ரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘பேட்ட’.இப்படத்தின் பட்ஜெட் ரூ.160 கோடி என்று சொல்லப்படும் நிலையில் படம் வெளியாகி ரூ.240 கோடி வரை வசூல் செய்தது.கிட்டத்தட்ட ரூ.80 கோடி வரை லாபம் பார்த்தது.

இந்த இரண்டு படங்களையும் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது பிகில்,பேட்ட படத்தை விட அதிகமாக வசூல் செய்துள்ளது.

5.சர்கார் மற்றும் 2.0

கடந்த 2018ல் இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய்,கீர்த்தி சுரேஷ்,யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘சர்கார்’.இப்படத்தின் பட்ஜெட் ரூ.100 கோடி என்று சொல்லப்படும் நிலையில் படம் வெளியாகி ரூ.246 கோடி வரை வசூல் செய்தது.கிட்டத்தட்ட ரூ.146 கோடி வரை லாபம் பார்த்தது.

கடந்த 2018ல் சங்கர் இயக்கத்தில் ரஜினி,ஏமி ஜேக்சன்,அக்ஷய் குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘2.0’.இப்படத்தின் பட்ஜெட் ரூ.400 – 600 கோடி என்று சொல்லப்படும் நிலையில் படம் வெளியாகி ரூ.615 – 800 கோடி வரை வசூல் செய்தது.கிட்டத்தட்ட ரூ.200 கோடி வரை லாபம் பார்த்தது.

இந்த இரண்டு படங்களையும் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது.2.0,சர்கார் படத்தை விட அதிகமாக வசூல் செய்துள்ளது.

6.மெர்சல் மற்றும் காலா

கடந்த 2017ல் இயக்குநர் அட்லீ இயக்கத்தில் விஜய்,சமந்தா,யோகி பாபு,காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மெர்சல்’.இப்படத்தின் பட்ஜெட் ரூ.120 கோடி என்று சொல்லப்படும் நிலையில் படம் வெளியாகி ரூ.235 கோடி வரை வசூல் செய்தது.கிட்டத்தட்ட ரூ.110 கோடி வரை லாபம் பார்த்தது.

கடந்த 2018ல் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி,ஹீமா குரேஷி,சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘காலா’.இப்படத்தின் பட்ஜெட் ரூ.120 கோடி என்று சொல்லப்படும் நிலையில் படம் வெளியாகி ரூ.211 கோடி வரை வசூல் செய்தது.கிட்டத்தட்ட ரூ.91 கோடி வரை லாபம் பார்த்தது.

இந்த இரண்டு படங்களையும் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது.மெர்சல்,காலா படத்தை விட அதிகமாக வசூல் செய்துள்ளது.

7.பைரவா மற்றும் கபாலி

கடந்த 2017ல் இயக்குநர் பரதன் இயக்கத்தில் விஜய்,கீர்த்தி சுரேஷ்,சதீஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘பைரவா’.இப்படத்தின் பட்ஜெட் ரூ.50 கோடி என்று சொல்லப்படும் நிலையில் படம் வெளியாகி ரூ.115 கோடி வரை வசூல் செய்தது.கிட்டத்தட்ட ரூ.65 கோடி வரை லாபம் பார்த்தது.

கடந்த 2016ல் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி,ராதிகா ஆப்டே,தன்ஷிகா,தினேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘கபாலி’.இப்படத்தின் பட்ஜெட் ரூ.100 கோடி என்று சொல்லப்படும் நிலையில் படம் வெளியாகி ரூ.307 கோடி வரை வசூல் செய்தது.கிட்டத்தட்ட ரூ.207 கோடி வரை லாபம் பார்த்தது.

இந்த இரண்டு படங்களையும் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது.கபாலி,பைரவா படத்தை விட அதிகமாக வசூல் செய்துள்ளது.

8.தெறி மற்றும் லிங்கா

கடந்த 2016ல் இயக்குநர் அட்லீ இயக்கத்தில் விஜய்,சமந்தா,ஏமி ஜேக்சன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘தெறி’.இப்படத்தின் பட்ஜெட் ரூ.65 கோடி என்று சொல்லப்படும் நிலையில் படம் வெளியாகி ரூ.158 கோடி வரை வசூல் செய்தது.கிட்டத்தட்ட ரூ.93 கோடி வரை லாபம் பார்த்தது.

கடந்த 2014ல் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி,சோனாக்சி சின்கா,அனுஷ்கா செட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘லிங்கா’.இப்படத்தின் பட்ஜெட் ரூ.100 கோடி என்று சொல்லப்படும் நிலையில் படம் வெளியாகி ரூ.154 கோடி வரை வசூல் செய்தது.கிட்டத்தட்ட ரூ.54 கோடி வரை லாபம் பார்த்தது.

இந்த இரண்டு படங்களையும் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது.தெறி,லிங்கா படத்தை விட அதிகமாக வசூல் செய்துள்ளது.

9.புலி மற்றும் கோச்சடையான்

கடந்த 2015ல் இயக்குநர் சிம்பு தேவன் இயக்கத்தில் விஜய்,சுருதி ஹாசன்,ஹன்சிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘புலி’.இப்படத்தின் பட்ஜெட் ரூ.130 கோடி என்று சொல்லப்படும் நிலையில் படம் வெளியாகி ரூ.101 கோடி வரை வசூல் செய்தது.கிட்டத்தட்ட ரூ.19 கோடி வரை நஷ்டத்தை சந்தித்தது.

கடந்த 2014ல் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினி,சரத்குமார்,தீபிகா படுகோன்,ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘கோச்சடையான்’.இப்படத்தின் பட்ஜெட் ரூ.125 கோடி என்று சொல்லப்படும் நிலையில் படம் வெளியாகி ரூ.42 கோடி வரை வசூல் செய்தது.கிட்டத்தட்ட ரூ.83 கோடி வரை நஷ்டத்தை சந்தித்தது.

இந்த இரண்டு படங்களளும் தோல்வி படங்களாக பார்க்கப்பட்டது.

10.கத்தி மற்றும் எந்திரன்

கடந்த 2014ல் இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய்,சமந்தா,சதீஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘கத்தி’.இப்படத்தின் பட்ஜெட் ரூ.70 கோடி என்று சொல்லப்படும் நிலையில் படம் வெளியாகி ரூ.130 கோடி வரை வசூல் செய்தது.கிட்டத்தட்ட ரூ.60 கோடி வரை லாபம் பார்த்தது.

கடந்த 2010ல் இயக்குநர் சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த்,ஐஸ்வர்யா ராய்,சந்தானம் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘எந்திரன்’.இப்படத்தின் பட்ஜெட் ரூ.150 கோடி என்று சொல்லப்படும் நிலையில் படம் வெளியாகி ரூ.320 கோடி வரை வசூல் செய்தது.கிட்டத்தட்ட ரூ.170 கோடி வரை லாபம் பார்த்தது.

இந்த இரண்டு படங்களையும் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது.எந்திரன்,கத்தி படத்தை விட அதிகமாக வசூல் செய்துள்ளது.

Previous articleஅதிகரித்து வரும் முகநூல் மோசடி தப்பிப்பது எப்படி?
Next articleஒரே நேரத்தில் அதிக நெருப்பு வளையங்களை சுழற்றிய பெண்!!! கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்று சாதனை!!!