உங்கள் உடலில் இரும்பு சத்து குறைவா? 7 நாட்களில் அதிகரிக்கும் எளிய வழிமுறை!

0
200

உங்கள் உடலில் இரும்பு சத்து குறைவா? 7 நாட்களில் அதிகரிக்கும் எளிய வழிமுறை!

நான் நன்றாக தான் சாப்பிடுகிறேன். தினமும் உணவில் கீரை எடுத்துக் கொள்கிறேன். இரும்பு சத்து மாத்திரைகளை சாப்பிடுகிறேன். அப்படி இருந்தும் எனக்கு ரத்தத்தில் இரும்புச்சத்து அளவு குறைவாக உள்ளது. ரத்தசோகை உள்ளது. என்ன செய்வது? என கேட்பவர்களுக்கான பதிவு இது!

இந்த எளிய குறிப்பை நீங்கள் ஏழு நாட்களுக்கு பயன்படுத்தி வந்த பிறகு உங்கள் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரித்திருப்பதை பரிசோதனை மூலமே அறிந்து கொள்ளலாம்.

நமது உடலில் போலிக் அமிலத்தின் அளவு குறைந்தால் கூட நமது உடலில் இரும்பு சத்தின் அளவு குறையக்கூடும்.

1. முதலில் 100 கிராம் அத்திப்பழத்தை எடுத்து துண்டுகளாக்கிக் கொள்ளவும். பிரெஷ்ஷான அத்திப்பழத்தை கூட இதற்கு பயன்படுத்தலாம். அத்திப்பழத்தில் அதிக அளவு இரும்புச் சத்து மற்றும் பொட்டாசியம், காப்பர், மெக்னீசியம், கால்சியம், சோடியம், உள்ளிட்ட எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.

2. அடுத்ததாக இரண்டு பெரிய நெல்லிக்காய்களை துண்டுகளாக்கிக் கொள்ளவும். நெல்லிக்காயில் அதிக அளவு விட்டமின் சி உள்ளது. நமது உடல் அதிகளவு இரும்பு சத்து உறிஞ்ச நாம் விட்டமின் சி உள்ள உணவுப் பொருட்களை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

3. அடுத்து 3 இன்ச் அளவு இஞ்சியை தோல் சீவி துண்டுகளாகவும். தற்போது குழந்தைகளுக்கு கூட ரத்த சோகை ஏற்படுகிறது. இதற்கு காரணம் சாப்பிட உணவு முழுமையாக செரிக்காமல் போவது தான். இஞ்சியை உணவில் சேர்த்துக் கொள்ளும் பொழுது சாப்பிட்ட உணவு முழுமையாக ஜீரணம் ஆகும். இஞ்சியை நாம் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நாம் சாப்பிட்ட உணவு முழுமையாக செரிமானமாகி அதில் உள்ள சத்துக்கள் நமக்கு முழுமையாக கிடைக்கும்.

4. கட் செய்த அத்திப்பழம் நெல்லிக்காய் இஞ்சி ஆகியவற்றை சுத்தமான ஒரு கண்ணாடி பாட்டிலில் போடவும். அதில் சுத்தமான தேன் சேர்த்து கலந்து கொள்ளவும். தேனில் ஏகப்பட்ட நன்மைகள் உள்ளன நம் உடலுக்கு தேவையான அயர்ன் சத்து, பொட்டாசியம், காப்பர், ஆகியன தேனில் அதிக அளவு உள்ளது. இறுதியில் ஒரு சுருள்பட்டையை துண்டுகளாக்கி அதில் போடவும். சுருள்பட்டையானது நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கிக் கொடுப்பதற்கு மிகவும் முக்கியமானது.

இந்த கலவையை 8 முதல் 10 நாட்களுக்கு நன்றாக இருக்கும் மூடி ஊற விடவும். பின்னர் பத்தாவது நாளுக்கு பின்னர் தினமும் காலை உணவில் ஒரு ஸ்பூன், மதிய உணவின்போது ஒரு ஸ்பூன், இரவு உணவின் போது ஒரு ஸ்பூன், என ஏழு நாளைக்கு தொடர்ந்து சாப்பிட்டு வர உங்கள் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு நினைத்து கூட பார்க்க முடியாத அளவு உயர்ந்து இருக்கும்.

Previous articleமேஷம் ராசி-இன்றைய ராசிபலன்!! ஆன்மீக சிந்தனையால் நலம் பெறும் நாள்!!
Next articleரிஷபம் ராசி- இன்றைய ராசிபலன்!! தொலைதூரப் பயணம் உண்டாகும் நாள்!!